தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய ரவிச்சந்திர அஸ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் போதும் முதலில் நியாபகம் வருவது தல எம்.எஸ்.தோனி என்ற பெயர் தான், அந்த அளவிற்கு எம்.எஸ்.தோனிக்கும் சென்னை மண்ணிற்கும் உள்ள ஒரு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் பல வட இந்தியர்களை வெறுத்தாலும் அனைவராலும் வெறுக்கப்படாத ஒரு வட இந்தியர் யார் என்றால் அது எம்.எஸ்.தோனி தான்.

அந்த அளவிற்கு சென்னை முழுவதும் ‘தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனியின் இரண்டாவது சொந்த ஊர் சென்னை என்றே சொல்லலாம். ஐபிஎல் தொடங்கி காலத்திலிருந்து இன்று வரையில் அதிகமுறை ஒரே அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் அது எம்.எஸ்.தோனி தான். இந்நிலையில் தற்போது நடித்து வரும் ஐபிஎல் தொடர் தான் தோனியின் கடைசி தொடர் என்றும் அதற்கு பிறகு வேறு ஒருவர் கேப்டனாக இருப்பார் என்று பலவிதமான தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் ஆல்ரவுண்டர் அஸ்வின் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தோனி குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது “கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பேட்டிங் செய்வதை நான் பார்த்து வருகிறேன். உங்களுக்கு வயதாகும்போது உங்கள் கைகளின் வேகம் குறையும், இதனால் உங்களுடைய பேட்டின் வேகமும் குறையும். அது அந்த வீரருக்கு பெரும் பிரச்னையாக இருக்கும்.

ஆனால் தோனியை பொறுத்தவரையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை, சர்வதேச தரமான பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொள்ளவில்லை. மேலும் அவர் தனது நேரத்தில் டிராக்டர்களை மட்டுமே ஓட்டிச் சென்றார். அதனால் ஐபிஎல் போட்டியில் அவரது ஆட்டம் சற்று மெதுவாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் ஐபிஎலில் இஷ்டம்போல் சிக்ஸர்களை அடித்து விளாசுகிறார். அவரது பேட் வேகத்தைப் பற்றி நான் அவரிடம் கேட்டேன். பேட் வேகத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று? அவர் ஜனவரி முதல் பயிற்சி செய்கிறேன் என்று பதிலளித்தார்.
சிஎஸ்கே கேப்டன் தோனியின் ஓய்வு பற்றிய சோசியல் மீடியாவில் பரவலாக இருந்தாலும், ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு எம்எஸ் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று நம்பவில்லை. டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்ததால் தான் அவர் வலிமையான என்று நினைக்கிறன். அவரது பைசெப்ஸ் அதிக வலிமையாக இருக்கிறது. ஐபிஎல்லில் இது அவரது கடைசி ஆண்டு என்று நான் நினைக்கவில்லை. அவர் இன்னும் 3-4 ஆண்டுகள் எளிதாக விளையாட முடியும் இல்லையா? 7-8 ஆண்டுகள் கூட ஆடலாம் அஸ்வின் மேலும் கூறினார்.





