சஞ்சு சாம்சன் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது சாவை மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய செய்தது. சஞ்சுவின் முடிவை சரியென நிரூபித்த அந்த அணி, யஷஸ்வியின் அபாரமான பேட்டிங்கால் அரைசதத்தால் 202 ரன்களை எடுக்க முடிந்தது.

இந்த இலக்கை துரத்திய சென்னை அணி சிறப்பான தொடக்கம் பெற்றதுடன், ருதுராஜின் அதிரடியான பேட்டிங்கால் சென்னை அணியின் ரன்ரேட்டும் சிறப்பாக உயர்ந்து வந்தது.ஆனால் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ தொடங்கியதும், போட்டி அணியின் கையை விட்டு நழுவி சென்றது. இறுதியில் சிவம் துபே அபாரமாக ஆடி அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற முயற்ச்சி. இருப்பினும் இறுதியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருதைப்பெற்றார். இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு யஷஸ்வி சிறப்பான ஆட்டத்தையே தொடர்ந்து வந்தார். அதே பாணியை இந்த போட்டியிலும் மேற்கொண்டார். அணிக்காக அதிக ரன் குவித்தவர் என்ற வீரர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரின் அற்புதமான ஆட்டத்தின் காரணமாக ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது. அப்படியொரு நிலையில் தான் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் குறித்து ரவிசாஸ்திரி பேசியிருக்கிறார்.

ரவி சாஸ்திரி கூறியது :
தோனிக்கு நிகரான குணங்கள் சஞ்சு சாம்சனிடம் இருக்கிறது. நான் அவரைப் பார்த்தது குறைவாக என்றாலும் சஞ்சு மிகவும் அமைதியானவர், நிதானமானவர். அவர் சிலவற்றை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை என்றாலும் தன்னுடைய அணியின் வீரர்களுடன் சிறப்பாக தொடர்பு கொள்கிறார். அவர் எந்த அளவுக்கு கிரிக்கெட்டில் விளையாடுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் அனுபவத்தைக் கற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன் என்றார் ராவி சாஸ்திரி.

மேலும் ராஜஸ்தானுக்கு சென்னைக்கும் இடையேயான போட்டி முடிந்ததும் பேசிய ரவி சாஸ்திரி “சஞ்சு சாம்சன் கேப்டனாக முதிர்ச்சியடைந்துள்ளார். ஏனென்றால் சூழல் பந்து வீச்சாளர்களை அவர் சரியாக பயன்படுத்துகிறார். குறிப்பாக டி20 போட்டிகளில் மூன்று சூழல் பந்து வீச்சாளர்களை வைத்து சிறப்பாக செயல்படுவது ஒரு நல்ல கேப்டனினால்தான் முடியும். அந்த வகையில் சஞ்சு சாம்சன் அஸ்வின்,ஜாம்பா, யுவேந்திர சாஹல் போன்றவர்களை வைத்து சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று கூறினார் ரவி சாஸ்திரி.





