ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. அதற்கு காரணம் மஹேந்திர சிங் தோனி. இவர் இந்தியாவின் கேப்டனாக இருந்த போதே ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வாங்கி கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் இந்த பல வருடங்களாக ஐபிஎல்லில் சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கும் தோனிக்கு வரும் ஜூலை 7ஆம் தேதியோடு 42 வயதாகிறது.

மேலும் இந்த ஆண்டு தான் தோனியின் கடைசி சீசன் என்று தகவல்கள் பரவியத்தினால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இதனால் எப்படியாவது தோனி பேட்டிங் செய்வதை பார்த்து விட வேண்டும் என்று எல்லா போட்டிகளிலும் காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே பல போட்டிகளில் 15 ஓவர் கடந்தால் போதும் தோற்றாலும், வெற்றியடைந்தாலும் தோனி விளையாடுவது மட்டுமே போதும் என்று ரசிகர்கள் எண்ணுகின்றனர்.
அப்படிப்பட்ட நிலையில் போட்டிகளில் தோனிக்கு முன்னர் வரும் ஜடேஜா, மொயின் அலி, அம்பதி ராய்டு போன்றவர்கள் அட்டமிழந்தாலும் தோனியை பார்த்தல் போதும் என்று இருக்கின்றனர். அந்த வகையில் தான் கடந்த 10 ஆம் தேதி நடந்த CSK vs DC போட்டியில் வேகமாக விக்கெட்டுகள் விழுந்ததால் ஜடேஜா விரைவாக களமிறங்கினார். ஆனால் அவர் சில ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தோனி களமிறங்கி சிக்ஸர்களை விளாசினார்.
Jaddu saying this with a smile but lot of pain inside… Belive me it's a trauma ! Imagine your own team spectators not supporting you waiting for your wicket! Still criticizing you even after winning 3 man of the matches !@imjadeja you are prince of @ChennaiIPL ❤️🛐 pic.twitter.com/QrSG8sRcV5
— Dr Rajkumar (@I_Raj13) May 10, 2023
இந்நிலையில் தான் போட்டிக்கு பிறகு பேசிய ஜடேஜா சில மனதை உருக்கும் விஷியங்களை கூறினார் ” நான் களமிறங்கிய போது தோனி தோனி என்று ரசிகர்கள் அவரை அழைத்து கொண்டே இருக்கின்றனர். நான் முன்னரே பேட்டிங் செய்ய வந்தால் ரசிகர்கள் நான் ஆட்டமிழக்க காத்துகொண்டு இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அணி வெற்றியடையும் வரையில் அது எனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறினார் ரவீந்திர ஜடேஜா.

மேலும் ரசிகர்கள் பலரும் ஜடேஜா மிகவும் சோகத்தில் இருக்கிறார் என்றும், தன்னுடைய அணியின் ரசிகர்களே தான் ஆட்டமிழக்க வேண்டும் என்று கூறும் போது எந்த பெரிய வீரராக இருந்தாலும் கண்டிப்பாக அவர்களுக்கு வருத்தம் இருக்கும் என்று ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை ஜடேஜாவும் லைக் செய்திருந்தார். இதன் முலம் ஜடேஜாவும் வருத்தப்படுகிறார் என்பது சரியாக தெரிகிறது.

அப்படிப்பட்ட நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எதிர்வினையாக #WELOVEYOUJADEJA என்ற ஹேஸ்ட்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். கிட்டத்தட்ட 1 நாள் முழுவதும் அது ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த டென்டிங் ஹேஸ்ட்டேக் சென்னை ரசிகர்கள் ஜடேஜாவின் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கையை உதரணமாக கூறலாம்.





