உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2023 தற்போது கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. இந்த சீசன் கண்டிப்பாக ஐபிஎல் ரசிகர்களின் வாழ்க்கையில் நீக்காத ஒரு இடத்தை பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஏனெனில் இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசன் என்ற தகவல் சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தோனி ஒரு வேளை இந்த ஐபிஎல் சீசனுடன் தன்னுடைய ஐபிஎல் சகாப்தத்தை முடித்தால் அது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும், ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது போல இருக்கும். இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து தற்போது மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது பதிலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தோனி குறித்து ஜடேஜா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
தோனி ஓய்வு எப்போது :
இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் ரவீந்திர ஜடேஜா பத்திரிகையாளர்களையும், செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது எம்.எஸ்.தோனி பற்றி சில விஷியங்கள் கேட்கப்ப்டடது. அதற்கு பதிலளித்த ஜடேஜா கூறுகையில் “தோனிக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்றாகவே தெரியும். அவர் ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாட விரும்பினால், விளையாடுவார். அதே சமயம் விடைபெற நினைக்கும் போது கடனிப்பாக அத்தனையும் செய்வார்.

தோனி தன்னுடைய சொந்த சேப்பாக்கம் அரங்கிற்கு திரும்பியதால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் எந்த பதிலும் அளிக்கவில்லை. சமீபத்தில் கூட அவர் கொடுத்திருந்த பேட்டியில் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனான இருந்து வரும் ரோஹித் சர்மா, எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்து பேசியிருந்தார்.

சேப்பாக்கத்தின் ராஜா
சென்னை சூப் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக பயிற்சியின் போது ரசிகர்களால் நிரம்பிய தனது சொந்த மைதானமான சேப்பாக்கின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். எம்எஸ் தோனி இதுவரை தனது ஐபிஎல் வாழ்க்கையில் மொத்தம் 235 போட்டிகளில் 48 இன்னிங்ஸ்களை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியுள்ளார். இந்த 48 இன்னிங்ஸ்களில் 7 அரைசதங்கள் அடித்துள்ளார்.

சேப்பாக்கத்தில் தோனியின் சாதனை :
இதனுடன், ஐபிஎல்லின் சிறந்த ஆட்டமிழக்காத 75 ரன்களும் இங்கு விளையாடப்பட்டன. சேப்பாக்கத்தில் விளையாடிய 48 இன்னிங்ஸ்களில் தோனி 43.96 சராசரி மற்றும் 143.17 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 1363 ரன்கள் எடுத்தார். இதில் அவர் 88 பவுண்டரிகள் மற்றும் 64 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் அடுத்து 3 வது பந்திலும் 6 அடிக்க முயற்சி செய்தார். ஆனால் கேச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருந்தாலும் சேப்பாக்கம் மைதானத்தில் தான் யார் என்பதனை காட்டினார் தோனி.





