ஐபிஎல் அணிகளில் மிகவும் முக்கியமான அணியான ஆர்சிபி அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ் சொன்னதை கேட்டு விராட் கோலி வீழ்ந்து விழுந்து சிரிக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் கப் என்பது ஒரு கனவாகவே இருந்து வருகிறது. சொல்லப்போனால் கடந்த 16 சீசன்களில் ஒரு முறை கூட ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வில்லை.

ஆனால் முன்னர் போன இல்லாமல் தற்போது ஆர்சிபி அணியில் நிர்வாகம் பல மாறுதல்களை செய்து வருகிறது. குறிப்பாக பல ஆண்டுகளாக கேப்டனாக இருந்த விராட் கோலியை மாற்றுவது, புதிய வீரர்களை ஏலத்தில் எடுப்பது, புதிய பயிற்சியாளர்களை பணி அமர்த்துவது போன்ற அதிரடியான செயல்களை செய்து வந்தது. அதன் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி சென்று வருகிறது சென்று வருகிறது.
இந்நிலையில் இந்த சீசனில் பெங்களூரு அணி மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த போட்டியை பார்த்தே ஆகவேண்டும் என்று பெங்களூரு ரசிகர்கள் முனைப்பாக இருந்து வருகின்றனர். அதே போல டிக்கெட்டுகளை வாங்கும் போது கூட ஆர்சிபியின் தாரக மந்திரமான “ஈ சாலா கப் நமதே” என்பதனை உச்சரித்தபடி நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.

இப்படியொரு நிலையில் தான் சமீபத்தில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ஆர்சிபி அணி கேப்டன் டூ ப்ளஸிஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி இருவரும் கலந்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆர்சிபி கேப்டன் டூ ப்ளஸிஸ் அவர்களிடம் மைக்கை கொடுத்து “ஈ சாலா கப் நமதே” என்ற வார்த்தையை கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட டூ ப்ளஸிஸ் “ஈ சாலா கப் நஹி” என்று தெரிவித்தார்.
Faf Du Plessis by mistake says “Ee Sala Cup Nahi”. pic.twitter.com/mhyR7Dd1hI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 1, 2023
இதனை கேட்ட முன்னாள் ஆர்சிபி கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீரருமான விராட் கோலி விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் டூ ப்ளஸிஸ் சொன்ன “ஈ சாலா கப் நஹி” என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை கூறினார் விராட். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில் இதனை வைத்து மற்ற ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





