வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் 1 போட்டியில் இங்கிலாந்தும் வென்றுள்ளது. இதனால் அடுத்து வரும் 2 போட்டிகளும் மிகவும் முக்கியமானவை. இந்நிலையில் இந்த மூன்றவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற்றே ஆகவேண்டிய காட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் அடுத்த இரண்டு போட்டிகள் இருப்பதினால் போட்டியை சமன் செய்யவோ அல்லது வெற்றிபெறவோ முடியும்.

அப்படிபட்ட நிலையில் தான் மார்க் வுட் மூன்றாவது போட்டியில் சிறப்பாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசினார். முதல் இன்னிங்கில் நன்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒரு காரணியாக இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் ஜம்பன்வானுமாகிய ரிக்கி பாண்டிங் இங்கிலாந்து மார்க் வுட் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “மார்க் வுட் என்னை பொருத்தபவையுள் பிரட் லீயும், மிட்செல் ஜான்சனும் சேந்தது போன்று இருக்கிறார். வேகமாக பந்துவீசுவது, மேட்ஸ்மேன்களை தன்னுடைய வேகமாக பந்துவீசினால் அச்சுறுத்துவது என்று அந்த வேகத்தின் கொஞ்சம் ஸ்விங்கையும் சேர்ப்பது என எதிரணியை தாக்குவதற்கு முக்கியமான ஒரு ஆயுதமாக இருந்து வருகிறது.

எனக்கு அவரிடம் மாறுபட்டதாக தெரிந்தது, அவர் அவரது வேகம் மற்றும் ரிதம் மேலும் அதனை சரியாக மைதானத்தில் வெளிப்படுத்துவது. அத்தோடு அவருக்கு பந்தில் சில அசவுகளும் கிடைக்கிறது. பந்துவீச்சு அவர் வீசும் போது மிகவும் அற்புதமான இருந்து, அதே நேரத்தில் மிக மிக வேகமாகவும் இருக்கிறது.
நீங்கள் உஸ்மான் கவஜாவை கடந்த டெஸ்ட் போட்டியில் அவுட்டாக்கியதை பார்த்தீர்கள் என்றால் அவருடைய பந்து மணிக்கு 90 மைல் வேகத்தில் ஸ்விங் ஆகி மிடில் லைனில் வந்தது. இப்படிப்பட்ட ஒரு பந்துவீச்சாளர் உங்களுக்கு உடல் தகுதியுடன் கிடைக்கும் போது அவர்களை எதிர்கொண்டு பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஓன்று. அதே நேரத்தில் மார்க் வுட் மிக அதிகமான வேகத்தில் வீசக்கூடியவராக இருப்பதினால் அவரினால் எல்லா போட்டிகளிலும் களமிறக்குவது என்பது கடினம்.

எனக்கு தெரிந்து அடுத்து சில போட்டியில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் அவர் தொடர்த்து அப்படியே 90 மயில் வேகத்தில் வீசினார் என்ற அதனை இவர்களினால் சமாளிக்க முடியும். எனவே அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடுவார் என்பது சந்தேகம் தான் என்றார் ரிக்கி பாண்டிங். மார்க் வுட் 2018 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக 1.50 கோடிக்கு வாங்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிபிடதக்கது.





