ஐபிஎல் 2023 தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. இதில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது லக்னோ அணி. இந்நிலையில் 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்குகிய கொல்கத்தா அணிக்கு வெற்றிபெற கடைசி ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் கொல்கத்தா அணியில் அடித்து ஆடும் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில் தனி ஆளாக ஆட தொடங்கினார் ரிங்கு சிங். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய கொல்கத்தாவுக்கு கடைசி ஓவரில் வெற்றி 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அதிரடியாக ஆடிய ரிங்கு கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார். இருந்த போதிலும் கொல்கத்தா 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கொல்கத்தா அணி தோல்வியை தழுவினாலும் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார் ரிங்கு சிங். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு 478 ரங்களுடன் 4 அரை சத்தோடு 59 ரன்கள் சராசரியும். 149 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருக்கிறார் ரிங்கு. மேலும் 28 சிக்ஸர்களை விளையாடியிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் தான் நேற்று நடந்த போட்டியில் லக்னோ அணிக்கு பயத்தை காட்டிய ரிங்கு சிங் குறித்து லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் புகழ்ந்து கூறியுள்ளார்.
Rinku Singh hain inka naam🙌, namumkin nahin inke liye koi kaam 🤩 #KKRvLSG #IPLonJioCinema #TATAIPL #EveryGameMatters | @KKRiders pic.twitter.com/2YbgkciPW5
— JioCinema (@JioCinema) May 20, 2023
லக்னோ பயிற்சியாளர் கூறியது :
அவர் பேசுகையில் அவர் உண்மையிலேயே திறமையான பையன் போல் இருக்கிறார். அவர் வெற்றிக்காக பசியுடன் இருப்பதைப் போலவும் அதே நேரத்தில் அடக்கமாகவும் இருக்கிறார். தன்னால் என்ன செய்ய முடியும் என்பதில் அவருக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் பேட்டிங் திறமைகள் அதிகம். ஆனால அழுத்தத்தில் இருக்கும்போது தன்னால் அதைச் செய்ய முடியும் ரிங்கு என்பதைக் காட்டுகிறார்.
அது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான முக்கிய அம்சமாகும். இதனால் அவருக்கு கண்டிப்பாக எதிர்காலம் இருக்கிறது.ரிங்கு மீண்டும் பொறுப்பாக விளையாடினார். மேலும் அந்த கடைசி சில ஓவர்களில் பெரிய தவறுகளை அவர் செய்யவில்லை. கடைசியில் ஓவர்களில் நாங்கள் பேட்மேன் அடிக்கக்கூடிய பந்துகளை வீசவில்லை.
ஆனால் அந்த அழுத்தத்திலும் அற்புதமாக பேட்டிங் செய்தார் ரிங்கு என்றார். மேலும் நவீன் மற்றும் யாஷ் டெத் நேரத்தில் தொடர்ச்சியாக பல ஓவர்களை சிறப்பாகவும் அற்புதமாகவும் செயல்படுவது பார்ப்பது மிகவும் அற்புதமானது என்றார் பயிற்சியாளர் ஆன்டி பிளவர்.





