ஐபிஎல் 2023 தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிவைடைத்து. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் சிறந்த பினிஷர் என்று கூறப்படும் மஹேந்திர சிங் தோனியிடம் இந்த்ஸ் சீசனில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் அறிவுரை கேட்ட விஷியத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார் ரிங்கு சிங். ஐபிஎல் 2023 தொடரில் ரிங்கு சிங் குறிப்பிடத்தக்க அதிரடியா பேட்டிங் செய்தது அவரின் வாழ்க்கையை மாற்றியது என்று கூறலாம்.

இவருடைய பேட்டிங் கேப்டனை இழந்த இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த சீசனில் உறுதுணையாக இருந்தது. மேலும் றிங்குவின் பேட்டிங்கை பல முன்னணி வீரர்களும் பாராட்டினார்கள்.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரிங்கு சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனயிடம் ஆலோசனை கேட்ட விஷயம் குறித்து பேசினார்.
அதை பற்றி ரிங்கு சிங் கூறுகையில் “மஹி பாய் மிகவும் சிறந்த ஃபினிஷர், அதனால் அவரிடம் கடைசி நேரத்தில் ஆட்டத்தை முடிக்க வேறு வழிகள் என்ன என்று கேட்டேன். அதற்கு தோனி கூறினார் “நான் உங்கள் பேட்டிங்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன், நீங்கள் நன்றாக பேட்டிங் செய்தீர்கள் என்றார். மேலும் கடைசி ஓவரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார், அதவாது பந்துகளை நேராக அடிக்க முயற்சி செய்யிங்கள், பந்து வீச்சாளர்கள் அவர்க்கு பிடித்ததை செய்யட்டும் என்று தோனி கூறியதாக ரிங்கு சிங் அந்த போட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணையில் 12 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தது. இதனால் பிளேஆஃப்களைத் தவறவிட்டது. ஆனால் ரிங்கு சிங்கிற்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை கொண்ட சீசனாக இருந்தது. இந்த சீசனில் கொல்கத்தாவின் பல ஆட்டங்களில் அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார்.
KKR இன் இறுதி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் றிங்குவின் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. அவர் 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 67* ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றிக்கு நெருங்க உதவினார். கடந்த சீசனில் அவர் ஏழு ஆட்டங்களில் 174 ரன்கள் எடுத்த நிலையில் இந்த சீசனில், அவர் 14 ஆட்டங்களில் 59.25 என்ற சராசரி மற்றும் 149.52 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 474 ரன்கள் குவித்துள்ளார், இதில் நான்கு அரை சதங்கள் அடங்கும்.





