ரீஷ்ப் பந்த் ரசிகர்களுடன் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய டி20 போட்டியான ஐபிஎல் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே அதற்கான ரசிகர்கள் ஒத்துழைப்பும், ஆர்வமும் இமயத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடிக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

சொல்லப்போனால் இந்த தொரில் டெல்லி அணி தன்னுடைய சொந்த மைதானத்தில் விளையாடும் முதல் போட்டி இது என்றே கூறலாம். ஆனால் அதற்கு முன்னதாகவே டெல்லியின் முதல் ஆட்டத்தில் லக்னோவுடன் அந்த அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் கார் விபத்து காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்த ரிஷிப் பந்த் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிட்டார்கள்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இன்று நடக்கும் 7வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி ஏற்கனவே தனது முதல் போட்டியில் தோல்வியடைந்துவிட்டதால், இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற மிகவும் முனைப்பாக உள்ளது. அதே நேரத்தில் அந்த டெல்லி அணி தன்னுடைய சிந்த மைதானத்தில் விளையாடுவதினால் வெற்றி பெற்றே ஆகவேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது.

ரசிகர்களுக்கு நற்செய்தி :
இப்படியொரு நிலையில் தான் ரிஷப் பந்த் ரசிகர்கள் மற்றும் டெல்லி அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கார் விபத்தில் காயம் காரணமாக டெல்லி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வழக்கமான கேப்டனான ரிஷப் பந்த் PTI இல் இருந்து கிடைத்த தகவலின் படி, குஜராத்திற்கு எதிராக நடக்கும் போட்டியில் தன்னுடைய அணிக்கு ஆதரவளிக்கும் வகையில் பந்த் இன்று அருண் ஜெட்லி மைதானத்திற்கு வர இருக்கிறார்.
When he enter the Stadium
— Mihika Singh (@Stars_ki_Duniya) April 4, 2023
Audience Chanting :"We want Rishabh Pant."
😊😭💜💕#RishabhPant #DCvsGT pic.twitter.com/nF0RYOotbE
மைதானத்ல் ரிஷப் பந்த் :
அப்படி ரிஷப் பந்த் டெல்லி மைத்தனத்திற்கு வரும் பட்சத்தில் அது அணிக்கு மிகவும் ஆதரவான ஒன்றாக இருக்கும். சொல்லப்போனால் ஒரு தோல்விக்கு பிறகு ரிஷப் பந்த் தன்னுடைய ரசிகர்களை காண வருவதை விட ஒரு நல்ல விஷயம் டெல்லி ரசிகர்களுக்கு கிடையாது. அதன் படி ரசிகர்களுடன் ரீஷப் பந்த் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Rishabh Pant 🇮🇳💙 pic.twitter.com/3tKpX77iLn
— Sushant Mehta (@SushantNMehta) April 4, 2023
வீரர்கள் டி-சர்ட்கள் :
மேலும் 2022 டிசம்பரில் கார் விபத்தில் காயமடைந்த நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், தற்போது காயத்திலிருந்து மெல்ல மீண்டு வருகிறார். இருப்பினும், பந்த் இந்த முறை ஐபிஎல்லில் விளையாட முடியாது எனவே டெல்லியின் மீதமுள்ள 13 ஆட்டங்களில் ஒன்றில் அணியில் உள்ள அணைத்து வீரர்களும் பந்த் பெயர் உள்ள ஒரு ஜெர்சியை அணிந்து களம் இறங்கலாம் என பிடிஐ தெரிவித்துள்ளது. இது ரிஷப் பந்த் ரசிகர்களுக்கு ஒரு பெருமையான விஷயம் என்பது குறிப்பிடதக்கது.





