ஐபிஎல் 2023 தொடரில் குவாலிபயர் 2ல் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத்தை அணி மிகவும் சிறப்பாக விளையாடி 20 வது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 233 ரன்களை குவித்தனர். இதில் சுப்மன் மட்டுமே 60 பந்துகளில் 129 ரன்களை விளாசினார். இந்நிலையில் 234 என்ற இமாலய இலக்குடன் களமிறககிய மும்பை அணிக்கு தொடக்கமே மிகப்பெரிய சரிவாக இருந்தது.

வதேரா முதல் ஓவரில் அவுட்டாகி வெளியேறினர்.அதன் பின்னரே அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். திலக் வர்மா, கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் மட்டுமே ரன்கள் குவித்த நிலையில் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே அடித்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் முலம் ஐபிஎல் 2023 பைனல் செல்லவும் வாய்ப்பையும் மும்பை அணி இழந்தது. இந்த போட்டியில் முக்கியமாக ஆட வேண்டிய கேப்டன் ரோஹித் ஷர்மாவே 7 பந்துகளை எதிர்கொண்டு அதில் 8 ரன்கள் மட்டுமே அடித்தார். சொல்லப்போனால் இந்த வருட ஐபிஎல் சீசனில் ரோஹித் ஷர்மா சொல்லும் படியாக எதுவும் செய்யவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே அரை சதம் டெல்லிக்கு எதிராக அடித்தார்.

மேலும் இந்த சீசன் முழுவதும் 16 போட்டிகளில் விளையாடி 332 ரன்கள் மட்டுமே 20.75 சராசரியுடன் 132 ஸ்டைரைக் ரேட்டில் ஆடியுள்ளார்.அதற்கு பிறகு அவரால் பெரிய ரன்கள் எதுவும் எடுத்து மும்பை அணிக்கு உதவி செய்யவில்லை. இதனால் ரசிகர்கள் முதற்கொண்டு பல இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் மீது பெரும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
சேவாக் கூறியது :
இந்நிலையில் தான் MI vs GT போட்டிக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் வர்ணனையாளாருமான வீரேந்திர சேவாக் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பற்றி பேசுகையில் “அவரது பேட்டிங்கில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர் நிறைய விஷயங்களைச் செய்ய முயற்சிக்கிறார். நீங்கள் ஏற்கனவே மூன்று ஓவரில் 30 ரன்கள் எடுத்திருந்தால், அடுத்த ஓவரிலேயே இன்னும் 20 ரன்கள் எடுக்க முயற்சிப்பது ஏன்.

அவர் பொறுமையாக பேட்டிங் செய்து நின்றால் பந்து வீச்சாளருக்கு அழுத்தம் ஏற்பட்டு தொடர்ந்து தளர்வான பந்துகளைப் பெறுவார். அதில் அவர் பெரிய ஷாட்டுகளை முயற்சி செய்யலாம். ஆனால் ரோஹித் வலுக்கட்டாயமாக நல்ல பந்துகளில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்க முயற்சிக்கிறார். அவர் அந்த ஷாட்டுகளை அடிக்க முயற்சி செய்யும் போது அடைமிளகிறார். பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்தால் அவரை தேடியே வாய்ப்பு வந்திருக்கும் வீரேந்திர சேவாக்.





