ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களம் கண்ட லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தன.

ஆனால் க்ருனால் பாண்டியா நிதானமாகவே விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். 49 ரன்கள் எடுத்த நிலையில் க்ருனால் பாண்டியாவும் ரிடேர்ட் அவுட் ஆக அற்புதமாக விளையாடிய ஸ்டானிஸ் அணிக்கு நன்றாக ஸ்கோரை உயர்த்தினர். ஸ்டானிஸ் மட்டுமே 47 பந்துகளில் 89 ரன்களை குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை கொடுத்தார். இருதியில் 20 வது ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்களை குவித்தது.
மும்பை இன்னிங்ஸ் :
178 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹிட் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் அணிக்கு அதிரடியான தொடக்கத்தையே குடுத்தனர். ஆனால் லக்னோ அணியின் திறமையான பந்துவீச்சினால் 20 வது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்று ப்ளே ஆப்பிற்குள் செல்வதற்க்கான வாய்ப்பை தக்க

வைத்துள்ளது.
ரோஹித் சர்மா பேட்டி :
போட்டியில் வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெற கிடைத்த தருணங்களை இழந்து விட்டோம். ஆடுகளம் பேட்டிங் செய்ய சரியாக இருந்தது. ஒரு நல்ல பிட்ச், அந்த ஸ்கோர் நிச்சயமாக துரத்தக்கூடியதாக இருந்தது, இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் எங்களுடைய விளையாட்டில் சொதப்பி விட்டோம்.
முதல் இன்னிங்கில் கூட நாங்கள் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். கடைசி மூன்று ஓவர்கள் எதுவும் இல்லாமல் போனது. ஆனால் நாங்கள் பேட் மூலம் தொடங்கிய விதம், இலக்கை துரத்துவதற்கு சரியாக இருந்தது. ஆனால் நான் சொன்னது போல், இரண்டாவது பாதியில் நாங்கள் எங்கள் வழியை இழந்தோம் என்றார் ரோஹித் சர்மா.
மேலும் பேசிய ஆவர் கூறுகையில் ஸ்டோய்னிஸ் நன்றாக விளையாடினார், இது போன்ற ஒரு ஆடுகளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இது அவருடைய ஒரு அற்புதமான நாக். புள்ளிகள் மற்றும் NRR தொடர்பாக எவ்வாறு செயல்படும் என்று தெரியவில்லை. இதனால் எங்களின் கடைசி ஆட்டத்தில் SRHக்கு எதிராக நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று தெரிவித்தார் ரோஹித் ஷர்மா.





