இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணி கோப்பையை தகுவதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் இதனை கருத்தில் கொண்டு இந்தியா பலமான ஒரு அணியையும் தயார் செய்துள்ளது. கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் குறித்த தகவல் வெளியான நிலையில் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மாவே இந்தியாவை வழிநடத்துகிறார். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோஹித் சர்மாவிடம் சில கேள்விகள் கேட்கப்பது.

அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் :17 வருடங்களாக நான் கடந்து வந்த பயணம் மிகவும் அத்புதமானது. இன்னும் சில வருடங்கள் விளையாடி உலக கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்று நம்புகிறேன். உங்களுடைய நாட்டின் கிரிக்கெட் அணியை ஒரு கேப்டனாக வழிநடத்துவது என்பது மிகப்பெரிய பெருமை. நான் இந்திய அணியை வழிநடாத்துவேன் எண்டு நினைத்துப்பார்க்கவில்லை. ஆனால் நல்லவர்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்வார்கள்.
நான் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அணியில் உள்ள அனைவரும் ஒரே வழியில் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படிதான் ஒரு அணி விளையாட வேண்டும். இது தனிப்பட்ட மைல்கற்கள் மற்றும் தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் இலக்குகளைப் பற்றியது அல்ல, இது நாங்கள் 11 பேரும் ஒன்றாக இணைந்து அட்டவணை சிறப்பாக செயல்பட்டு & கோப்பையை வெல்வது ஆகும் என்றார் ரோஹித் சர்மா.

மேலும் தன்னுடைய கிரிக்கெட் பாதை குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்றங்களை விடவும் இறக்கங்களையே பார்த்திருக்கிறேன். இதன் அனுபவத்தின் காரணமாக எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு மனிதனாகவும் கிரிக்கெட் வீரராகவும் சரியானவனாக இருக்கிறேன் என்றார் ரோஹித் சர்மா.
டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :
ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்





