ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் போட முடிவு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 10 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே அடித்து ஹ்ரிதிக் சோக்கினிடம் விக்கெட்டை பறி கொடுத்து மீண்டும் டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

அணியின் கேப்டன் வார்னர் 47 பந்துகளில் 51 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் பறிகொடுத்தார்.19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்தன. 173 என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 36 பந்துகளில் 68 ரன்களை பூர்த்தி செய்தனர்.
அதன் பின் நிதானமாக கேப்டன் ரோகித் சர்மா ஆடிய ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்களை எடுத்தார். எளிதாக வெல்லக்கூடிய போட்டியை மும்பை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 0 ரன்களில் ஆட்டமிழந்து மும்பை அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

ஆனாலும் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவரும் ஆட்டமிழக்க மிகவும் எழுத்தாக வெற்றியடைய வேண்டிய போட்டியை இழுத்து கடைசியில் திரிலிங் கடைசி பந்துடன் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். இதனை தொடர்ந்து தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2023ல் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. அதோடு கேப்டன் ரோஹித் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.
Ro on call with Rits after a nail-biting win in Delhi 🥺💙#OneFamily #DCvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @ImRo45 pic.twitter.com/qCXaLj8dwT
— Mumbai Indians (@mipaltan) April 12, 2023
பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முகத்தில் வித்தியாசமான மகிழ்ச்சி. அதே நேரத்தில், வெற்றிக்குப் பிறகு அனைத்து வீரர்களையும் சந்தித்த பிறகு, ரோஹித் தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் வீடியோ அழைப்பில் பேசுவதைக் காண முடிந்தது. இதன் போது ரோஹித்தும் ரித்திகாவும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். வீடியோ அழைப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் கடுமையாக வைரலாகி வருகிறது, மேலும் மக்கள் அதை மிகவும் விரும்புகின்றனர்.





