ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி பதிவு செய்த்தது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத்திற்கு சரியான தொடக்கம் இல்லை. சொல்லப்போனால் முதல் மூன்று ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத்.

ஒரு கட்டத்தில் ஹைதரபாத் 150 தண்டுவார்களா என்றிருந்த நிலையில் அதிரடியாக ஆடிய கிளாசனின் பேட்டிங்கினால் 150 ரன்களை தொட்டது ஹைதராபாத். மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிளாசன் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களின் முலம் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் கிளாசன். ஆனால் சதம் அடித்த அந்த ஓவரிலேயே கிளாசன் 51 பந்துகளை 104 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது ஹைதராபாத் அணி.
சொல்லப்போனால் இந்த ஸ்கோர் வருவதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது கிளாசன் ஆடிய ஆட்டம் தான். அவர் அடித்த அணைத்து ஷாட்டுகளுமே ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இவர் ஆட்டம் ரசிகர்களையும் தாண்டி கிரிக்கெட் உலகில் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றி இட்டு கிளாசனை கவுரவித்துள்ளார்.
IPL is a mix of creative and traditional batting. Today has been a Klaas-ic display of traditional batting. Klaasen’s footwork has been simple and uncomplicated, one of the best I’ve seen in the recent past.
— Sachin Tendulkar (@sachin_rt) May 18, 2023
Treat to watch!#SRHvRCB #IPL2023 pic.twitter.com/mUVRTRxsYh
சச்சின் டெண்டுல்கர் ட்விட் :
சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவில் “ஐபிஎல் என்பது ஆக்கப்பூர்வமான மற்றும் பாரம்பரியமான பேட்டிங்கின் கலவையாகும். இன்று பாரம்பரிய பேட்டிங்கின் அற்புதமான காட்சிகளை நான் கிளாசன் பேட்டிங்கில் கண்டேன். கிளாசனின் ஃபுட்வொர்க் எளிமையாகவும் சிக்கலாற்றும் இருந்தது. சமீப காலங்களில் நான் பார்த்த ஒரு சிறந்த பேட்டிங் இதுதான். பார்க்கவே அற்புதமாக இருந்தது என்று பதிவிட்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

ஹைதாராபத் மற்றும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஹென்ரிச் கிளாசென் வெறும் 51 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஹர்ஷல் படேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரான வீரரான கிளாசான் தோனியை போல விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் அருமையாக செய்யக்கூடியவர். அவர் இந்த ஐபிஎல் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு இதுவரையில் சிறப்பான ஆட்டத்தை காட்டியுள்ளார்.
போட்டியை பொறுத்தவரையில் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆர்சிபியின் தொடக்க ஜோடியான விராட் கோலி மற்றும் டு பிளேசிஸ் சிறப்பாக விளையாடினார்கள். மேலும் ஃபாஃப் டு பிளிசிஸ் 71 ரன்கள் எடுத்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது வாழ்க்கையில் 76வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இறுதியில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் விதியசத்தில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலிலும் மும்பையை கீழே தள்ளி 4வது இடத்திற்கு வந்தது.




