ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. எம்.எஸ். தோனி கேப்டனாக தனது ஐந்தாவது பட்டத்தை வென்று இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும் அல்லது குஜராத் அணி வென்றால் இவ்விரு அணிகளை தவிர்த்து மூன்றவது பெரிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் உருவெடுக்கும்.

சென்னையை பொறுத்தவரை டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் குஜராத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அவர்கள் இறுதியில் குவாலிஃபையர் 1 இல் குஜராத் அணியியை சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றனர் . அதற்கு மேல், தோனியிடம் மிகவும் தேவையான அனுபவம் உள்ளது ஹர்திக் பாண்டியாவிற்கும் இறுதி போட்டியில் விளையாடிய அனுபவம் அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில், ஷமி, ரஷித் கான் உள்ளிட்டோர் சென்னை அணிக்கும் மிகவும் சவாலான வீரர்களாக இருப்பார்கள்.
கருத்து தெரிவித்த சச்சின் :
இந்நிலையில் தான் இன்று இரவு நடக்கும் போட்டி குறித்து கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “இந்த ஐபிஎல் சீசனில் சுப்கில்லுடைய விளையாட்டு மார்க்க முடியாததாக இருந்தது. அவர் கடைசியாக அடித்த 2 சதங்கள் மிகப்பெரிய தாக்கத்தை போட்டியில் ஏற்படுத்தியது. ஒரு சதம் மும்பை அணியில் தோல்விக்கு காரணமாக மாறியது. அதுதான் கிரிக்கெட்டில் கணக்கமுடியாத குணாதியமாகும்.

அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை, வென்றி பெற்றே ஆகவேண்டும் என்று ரன்களை எடுக்க துடிக்கும் அவரது பசி உள்ளிட்டவை எனக்கு சுப்மன் கில்லிடம் மிகவும் பிடித்தது. பொதுவாக அதிக ரன்கள் அடித்த ஆட்டங்களில் அதனை பொறுத்து போட்டியானது மாறும். சுப்மன் கில் 12 வது ஓவரில் இருந்து அற்புதமான ஒரு ஆட்டத்தை ஆடியது குஜராத் அணியின் வெற்றிக்கான வாய்ப்பை அதிகரித்து.
மும்பை அணிக்கு நம்பிக்கை கொடுத்து திலக் வர்மா குஜராத் அணியின் சிறந்த பௌலர் ஷமிக்கு எதிராக அவர் ஆடிய 24 ரன்கள். ஆனால் சூர்யா ஆட்டமிழந்ததும் அது உடைத்து. இன்று இரவு நடக்கும் போட்டியில் குஜராத் அணியை பொறுத்தவரையில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் உள்ளிட்டோரின் விக்கெட் சென்னை அணிக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

மறுபுறம் சென்னை அணியும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தோனி 8வதாக களமிங்கும் அளவிற்கு ஆழமாக போட்டியை எடுத்து செல்ல வேண்டும். இந்த போட்டியல் ஒரு அணியின் பேட்டிங் மற்றொரு அணிய விடவும் சிறந்ததாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக இன்று இரவு நடக்கும் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது என்று கூறினார் சச்சின் டெண்டுல்கர். அந்த பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





