ஐபிஎல்லில் முதல் தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி .ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் அணி அபாரமாக விளையாடி அபார வெற்றி பெற்றது. ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அபாரமாக பேட்டிங் மூலம் 197 ரன்களை குவித்தது.பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங்கும் 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். 198 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
ஆனால் அதன் பின் வந்த பேட்சஸ்மேன்கள் நிலையாக நின்று விளையாட முடியவில்லை. அதனால் அந்த அணி 20 ஓவரில் 192 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் முதல் தோல்வியை பெற்றது. ஐபிஎல் 2023 நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே போட்டி நடைபெற்றது. கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான பரபரப்பான ஆட்டம் நடைபெற்றது. இருப்பினும் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரருக்கு காயம் :
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்க்கு 197ரன்களை எடுத்தது. அதன் பின் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதே சமயம், ராஜஸ்தான் அணிக்கு இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரமுடியவில்லை, இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அணிக்கு மற்றொரு பெரிய அடி கிடைத்துள்ளது. அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர்க்கு காயம் ஏற்பட்டது.
What. A. Take 💪@josbuttler puts in a magnificent dive to dismiss the well set Prabhsimran for 60!@rajasthanroyals with their first wicket.#TATAIPL | #RRvPBKS pic.twitter.com/apJpCQmqjf
— IndianPremierLeague (@IPL) April 5, 2023
விலகும் ஜோஸ் பட்லர் :
ஜோஸ் பட்லர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக பீல்டிங் செய்யும் போது இரண்டு சிறப்பான கேட்ச்களை பிடித்தார். இதன் போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி இலக்கை துரத்த இறங்கிய போது, காயம் காரணமாக தொடக்க வீரரான பட்லர்முதலில் பேட்டிங் செய்ய வரவில்லை.இருப்பினும், அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தார் ஆனால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் தற்போது ஜோஸ் பட்லர் அடுத்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன.





