உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2021 மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம் மைதானத்தில் பலபரீட்சை செய்து வருகிறது. டெல்லி அணி இதற்கு முன்பு இரண்டு தோல்விகளிலும் சென்னை அணி இதற்க்கு முன்பு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நேற்றைய போட்டியில் மோதியது.

இதில் டெல்லியில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களது ஐபிஎல் 2024 முதல் வெற்றியை பதிவு செய்ய முடியும். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்வதை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்தது 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து 191 ரன்களை குவித்து இருந்தது.
இவர்களின் சிறப்பான தொடக்க ஆட்டத்தால் ஆட்டத்தாலும் அதன் பின்பு அந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்தாலும் டெல்லி அணி அவ்ளோ பெரிய இலக்கை குவித்தது இதில் டெல்லி அணியின் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்களும் பிரித்வி ஷா 43 ரன்கள் அடித்திருந்தனர். அதன் பின்பு வந்து ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டிய 32 பந்துகளில் 51 ரன்கள் குறித்து இருந்தார். அதில் நான்கு பவுண்டர்களும் மூன்று சிக்சர்களும் அவர் அடித்து இருந்தார்.

சென்னை அணியின் ஆதிக்கம் ஒரு சில ஓவர்களில் மட்டுமே இருந்தது அதன் பின்பு டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஆதிக்கம் தான் இந்த போட்டியில் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். இருந்த போதிலும் தோனி இப்படி விளையாடுவதை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களுடைய சென்னை அணி தோல்வியை தழுவ போகிறது என்பதை மறந்தது மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர்.

இந்த சூழ்நிலையில் தான் தோனியின் மனைவி சாக்ஷி தோனி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் முத்தலாக மீண்டும் வந்துள்ள ரிஷப் பண்ட்டுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்ட அவர் நாம் போட்டியில் தோற்றுவிட்டோம் என்பதையே மறந்து விட்டதாக தோனியை டாக் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் பயங்கரமான வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போட்டியின் முடிவில் அதிரடியாக விளையாடிய தோனிக்கு எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் விருதும் வழங்கப்பட்டது. பொதுவான ரசிகர்களுக்கு சென்னை அணியின் தோல்வி சோகத்தை கொடுத்தலும் தோனியின் ரசிகர்களுக்கு இந்த போட்டி கண்டிப்பாக ஒரு மறக்க முடியாத போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. மேலும் டெல்லி அணிக்கு இந்த வெற்றி உத்வேகத்தை கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் கிடையாது.





