ஐபிஎல் 2023 க்கான 27லீக் போட்டிகளில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் ,ராயல் சேலஞ்ஜர் அணியும் பஞ்சாப் மொஹாலியில் உள்ள மைதானத்தில் எதிர்கொண்டன. முன்னாள் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாடாத நிலையில் சாம் கரண் தலைமை வகித்தார். இந்நிலையில்அதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பௌலிங்கை தேர்வு செய்தார்.

இந்நிலையில் துவக்கத்தில் விளையாடிய விராட் கோலி மற்றும் டுபிளஸிஸ் இணைந்து அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தையே குடுத்தனர். இருவரும் இணைந்து 11.4 ஓவர்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிபை பூர்த்தி செய்தனர். அனால் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு பெரிதாக எந்த பேட்ஸ்மேக்களும் சொல்லிக்க வில்லை. இதனால் 175 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதற்கு பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி பரிதாபமாக தோல்வியை தழுவியது. இந்நிலையில் தான் பஞ்சாபின் தோல்விக்கு பிறகு அணியின் கேப்டன் சாம் கரன் தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.
சாம் கரன் பேசியது :
அவர் கூறியதாவது “நாங்கள் ஒரு குழுவாக சிறப்பாக விளையாடினோம் என்று நினைக்கிறோம். எங்களின் பந்துவீச்சு நன்றாக இருந்தது, ஆனால் அவர்கள் ஃபாஃப் மற்றும் விராட் இருவரும் சிறப்பான ஆட்டத்தை காட்டினார்கள். ஆனால் நாங்கள் அவர்களை வெளியேற விடவில்லை என்று நினைக்கிறோம். அதோடு எங்களின் பேட்டிங்கில் போதுமானதாக இல்லை. ஆர்சிபி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம், சில ரன் அவுட்களும் நடந்தது. மழையும் ஒரு காரணம் என்று கூறலாம்.

இன்று விளையாடிய விக்கெட் மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள் தோல்வியடைந்ததை நினைத்து வருந்துகிறோம். ஆனால் வரும் சனிக்கிழமை நாங்கள் மும்பையில் விளையாடுகிறோம். அங்கு விக்கெட் நன்றாக இருக்கும் எனவே அங்கு விளையாட காத்திருக்கிறோம் என்று கூறினார். அதோடு சைகைகளின் மூலம் பேட்ஸ்மேன்களை குற்றம் சாட்டியுள்ளார் சாம் கரண்.

இந்நிலையில் 175 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. அதர்வா 7 ரன்களிலும், ஷார்ட் 8 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். மிடில் ஓவர்களில் லிவிங்ஸ்டோன் 2, ஹர்பிரீத் 12 ஆகியோரிடமிருந்து ரசிகர்கள் அனைவரும் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களும் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தார்கள். பேட்ஸ்மேன்களும் தோல்வியடைந்த நிலையில் ஜிதேஷ் சர்மா மட்டும் நிலையாக நின்று 41 ரன்கள் விளாசினார்.





