அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2023 திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. 7 போட்டிகள் இதுவரையில் ம்யுடிந்த நிலையில் தற்போது 8வது போட்டி பர்சபரா கிரிக்கெட் விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றனர். ஏற்கனவே பஞ்சாப் அணி ஐபிஎல் 2023ல் முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில் அந்த வெற்றியை தொடர்ந்து வைத்துக்கொள்ள முனைப்பாக இருக்கிறது பஞ்சாப் அணி.

இவை ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ராஜஸ்தான் அணியும் ஒரு வெற்றியை பதிவு செய்து வலிமையான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால் இன்று நடக்கும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வெற்றியடைவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தொடக்கத்தில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது.
ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை ஏனெற்றால் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் இருந்து வந்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர் பஞ்சாப். பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதன் போது, அவர் 3 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் அடித்தார். இந்த செய்தியை எழுதும் போது கேப்டன் ஷிகர் தவான் 56 பந்துகளில் 86 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இருந்த போதிலும் விக்கெட் இழக்காமல் பஞ்சாப் அணியால் தொடர்ந்து ஆடமுடியவில்லை. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர்கள். அதன் போது ஜேசன் பட்ளரிடம் கேட்ச் அவுட் ஆனர் பிரப்சிம்ரன் சிங். ஆனாலும் அவர் அடித்த சிக்ஸர்கள் மற்றும் போர்ஸ் அடித்து பந்துவீச்சளர்களை மிரள வைத்தார்.
— Manikandan619 (@NinjaATG) April 6, 2023
இந்நிலையில் முதல் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 19 ரன்கள் எடுத்தார். இதன் போது அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரை கே.எம்.ஆசிப் பந்துவீசினார். அவர் அப்படி அதிரடியாக ஆடியதை பார்த்த விக்கெட்டுக்கு பின்னால் நின்றிருந்த சஞ்சு சாம்சன் ஆச்சரியப்பட்டு கைதட்டினார், அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





