சமீபத்தில் இந்தியாவின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவித்த அம்பத்தி ராயுடு சாமேப்பதில் செய்தி ஊடகம் ஒன்றிக்கு கொடுத்த பெட்டியில் 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பி போட்டியில் தன்னை புறக்கணித்தது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். தனக்கு கந்த காலத்தில் ஒருவருடன் சண்டை இருந்ததாகவும் அதுதான் நான் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்க காரணம் என்று அவர் கூறினார்.

மேலும் அவரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தும் நன்றாகப் பழகவில்லை என்பதை வெளிப்படுத்தினார். 2019 உலகக் கோப்பையின் போது பிரசாத் தலைமை தேர்வாளராக இருந்தார். 2005ல் ஆந்திரா அணிக்காக விளையாடிய போது, அணியின் கேப்டனின் பிரசாத் சில வழி முறைகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் ராயுடு குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தான் ராயுடுவின் இந்த பேட்டிக்கு பதில் கொடுத்துள்ளார் பிரசாத்.
பிரசாத் சமீபத்தில் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுக்கும் போது ராயுடு சொன்னதை குறிப்பிட்டு சில சிஷியங்களை விளக்கினார். அவர் கூறுகையில் “தேர்வுக் குழுவில் ஐந்து தேர்வாளர்கள் மற்றும் கேப்டனை தேர்வுக் குழுவில் அமர்த்தியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே ஒரு நபரின் முடிவு எடுக்கப்படுமா அல்லது அல்லது முழு கூட்டு முடிவு எடுக்கப்படுமா? ஒரு தனி நபர் ஒரு முடிவை எடுக்க முடியும் என்றால், உங்களுக்கு ஐந்து தேர்வாளர்கள் தேவையில்லை.

எனவே எந்த ஒரு முடிவு எடுக்கப்படும் முன்னர் முழு தேர்வுக் குழுவின் ஒருமித்த கருத்துடன் மட்டுமே தான் அது நடக்கும் நடக்கும். இதனால் இது ஒரு கூட்டு முடிவு தான் தனிப்பட்ட முடிவு கிடையாது. தேர்வு குழுவில் ஒருவர் தன்னுடைய கருத்தை சொல்லி அதனை செயல்படுத்த வேண்டும் என்றார் தேர்வு குழுவில் யாராவது அதை ஏற்க வேண்டும். குழுவில் எந்தவொரு தனிப்பட்ட ஒருவரின் முடிவுக்கும் இடம் கொடுத்தது என்றார்.
மேலும் ராயுடுவின் ஆந்திர கேப்டன்சி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரசாத் “ஒரு அணியில் நீண்ட கிரிக்கெட் சீசனில் விளையாடும் போது ஒரு சிறிய மாற்றங்கள் ஏற்படலாம். சகோதரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அந்த ஒரு காரணத்திற்காக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு போன்ற பெரிய மேடைக்கு அணியை தேர்வு செய்யும் போது வித்தியாசங்கள் இருக்கும்.
உலகக் கோப்பைக்கு முந்தைய இந்திய அணையில் அனைத்து சர்வதேச போட்டிகளுக்கும் ராயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்வு செயல்முறை ஒரு முழுமையான கூட்டு முடிவு என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ஆனால் அது ஒருபோதும் தனிப்பட்ட கருத்தாகவோ அல்லது முடிவாகவோ இருக்காது. என்று அவர் மேலும் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில் ராயுடு சமீபத்தில் ஐபிஎல் 2023 சென்னை அணியுடன் இடிந்து கோப்பையை வென்றார். இந்நிலையில் டெக்ஸ்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியிலும் ராயுடு இடம்பெற்றுள்ளார்.





