ஐபிஎல் 2023 தொடரின் 64வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி அணி சிறப்பாக பேட்டிங் செய்து இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 213 ரன்கள் எடுத்தது. ஆனால் இதனை துரத்திய பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உண்மையில் இந்த போட்டி டெல்லி அணியை விடவும் பஞ்சப் அணிக்கு தான் முக்கியமானது. ஏனென்றால் ஒரு வேலை இந்த போட்டியில் வெற்றிபெற்றால் 4வது இடத்திற்கு சென்றிருக்கலாம். அதோடு நாளை ராஜஸ்தானுக்கு எதிராக நடக்கும் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் தற்போது தோல்வியை தவழுவியத்தினால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது பஞ்சாப்.
ஷிகர் தவான் கூறியது :
அப்படிப்பட்ட நிலையில் தான் போட்டிக்கு பிறகு பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் போட்டியில் தோற்றது குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில் ” இது மிகவும் வெறுப்பாக இருக்கிறது. முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. ஸ்விங் இருக்கும் போதே நாங்கள் சில விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும். இது மிகவும் நெருக்கமான விளையாட்டு. ஆனால் தோல்வியடைந்து விட்டோம்.

கடைசி ஓவரில் நோ பால் வந்த போது ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எங்களால் வெற்றிபெற முடியவில்லை. இருந்த போதிலும் லிவிங்ஸ்டன் சிறப்பாக விளையாடினார். அவர் மேலும் கூறுகையில் “கடைசி ஓவரில் ஸ்பின் பந்துவீச வேண்டும் என்ற எனது முடிவு தவறாக சென்று விட்டது. வேகமும் அங்கு சென்றது. முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்கள் 18-20 ரன்கள் கொடுத்தார். அந்த இரண்டு ஓவர்கள் எங்களுக்கு ஆட்டத்தை மாற்றியது.
எங்கள் பந்துவீச்சாளர்கள் பவர்பிளேவை சரியாக பயன்படுத்தவில்லை. அதுதான் திட்டம், துரதிர்ஷ்டவசமாக அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. இதுபோன்ற விக்கெட்டுகளில் நாம் விக்கெட்டுகளைப் பெற்றாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, சரியான இடங்களில் பந்து வீச வேண்டும். தோல்வியடைந்தது வருத்தமாக இருக்கிறது.
Dhawan said "My decision to bowl the spinner in the final over backfired us & costed the game". pic.twitter.com/oD102Hy9mY
— Johns. (@CricCrazyJohns) May 17, 2023
ஒவ்வொரு பவர்பிளேயிலும் 50-60 ரன்கள் கொடுக்கிறோம், அதற்கு விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். 1-2 ஓவர்களுக்கு பந்து ஸ்விங் செய்யும் என்று எங்களுக்குத் தெரியும். இரண்டாவது ஓவரில் நாங்கள் முதல் விக்கெட்டை இழந்தோம், நான் டக் அவுட் ஆனேன், முதல் ஓவரிலேயே 6 பந்துகள் வீணாகி விட்டது என்று கூறினார் ஷிகர் தவான்.




