ஐபிஎல் 2023 தொடரின் 53-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் அதற்கு பிறகு விக்கெட்டுகள் விழுந்தது. இருந்த போதிலும் ஷாருக்கான் மற்றும் கார்ப்ரேட் இருவரும் இணைத்து கடைசி ஓவரில் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்நிலையில் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20வது ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் முலம் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் நம்பிக்கையை மேலும் உறுதி படுத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அதே நேரத்தில், வெற்றிக்குப் பிறகு, கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தார், மேலும் போட்டிக்கு பின் பேசிய ராணா ஒட்டுமொத்த அணியின் வெற்றிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் “உண்மையிலேயே எங்களுடைய அணி தோல்வியடைந்தது மிகவும் வரும்தாம் அளிக்கிறது.

இது பேட்டிங் செய்வதற்கு சுலபமான மைதானம் கிடையாது. எனவே நாங்கள் அடித்த 179 ரன்கள் எங்களுடைய வெறிக்கு வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இறுதியில் கொல்கத்தா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது. இந்த போட்டியின் கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாக பந்து வீசினார்.

அதோடு இந்த போட்டியில் கடைசி பந்து வரை ஆட்டத்தை கொண்டு சென்ற பெருமை அவரைத் தான் சேரும். அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் மிக அற்புதமாக பந்துவீசியிருந்தார். இந்த விக்கெட் நன்றாக திரும்பியது. ஆனால் எங்களிடம் ஒரு நல்ல ஆஃப் ஸ்பின்னர் இல்லை என்று நினைக்கிறன். அங்குதான் நாங்கள் அதிக ரன்களை கொடுத்து விட்டோம் என ஷிகர் தவான் தெரிவித்தார்.





