ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 66 போட்டியை பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் மோதின. இதில் பஞ்சாப் அணி ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவி பிளே ஆஃபிலிருந்து வெளியேறியது. போட்டியை பொறுத்தவரையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்ப நிலையிலே சொதப்பி வந்தனர்

தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றிய நிலையில் அதிரடி மன்னர் லிவிங்க்ஸ்டன் தனது பாணியை தொடர்வார் என எதிர் பார்த்த நிலையில் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் ஜோடி இணைந்த சாம் கரண் மற்றும் ஷாருக்கான் ராஜஸ்தான் அணியின் பௌலிங்கை சிதறடித்து வந்தனர். சாம் கரண் 49 ரன்களிலும் ஷாருக்கான் 41 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது.
188 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தொடக்க ஆட்டகரார்கள் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேற அதன். படிக்கல் 51 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங்கிடம் விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 50 ரன்கள் எடுத்த நிலையில் அதிரடியா ஆடிய ராஜஸ்தான் வீரர்களினால் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சப் தோல்வியை தளுவியது.

ஷிகர் தவான் கூறியது :
இந்நிலையில் போட்டி முடிந்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் “நாங்கள் பவர்பிளேயில் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம், அது எங்களை பின்னுக்குத் தள்ளியது, ஆனால் கரன், ஜிதேஷ் மற்றும் ஷாருக் ஆகியோர் எங்களை ஆட்டத்தில் மீட்டெடுத்தனர். பந்துவீச்சு நன்றாக இருந்தது ஆனால் பீல்டிங் சரியாக இல்லை. பல கேட்சுகளை விட்டோம் அதுவே தோல்விக்கு காரணமாகியது. இந்த மைத்தனத்தில் 200 ரன்கள் நல்ல ஸ்கோராக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
சில சமயம் பேட்டிங் க்ளிக், சில சமயங்களில் பந்துவீச்சு க்ளிக் ஆகிறது ஆனால் இவற்றை எங்களினால் ஒன்றாக இணைக்க முடியவில்லை. இது ஒரு இளம் வீரர்களின் குழு, எனவே இந்த சீசனில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். நான் ஆட்டத்தை ஆழமாக எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், அதனால் எனது சிறந்த பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் பந்து வீச வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால் ராகுல் கடைசி ஓவரை வீச வேண்டியிருந்தது என்றார் ஷிகர் தவான்.




