ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 66 போட்டியை பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் மோதின. இதில் பஞ்சாப் அணி ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவி பிளே ஆஃபிலிருந்து வெளியேறியது. போட்டியை பொறுத்தவரையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்ப நிலையிலே சொதப்பி வந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றிய நிலையில் அதிரடி மன்னர் லிவிங்க்ஸ்டன் தனது பாணியை தொடர்வார் என எதிர் பார்த்த நிலையில் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் ஜோடி இணைந்த சாம் கரண் மற்றும் ஷாருக்கான் ராஜஸ்தான் அணியின் பௌலிங்கை சிதறடித்து வந்தனர். சாம் கரண் 49 ரன்களிலும் ஷாருக்கான் 41 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது.
188 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தொடக்க ஆட்டகரார்கள் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேற அதன். படிக்கல் 51 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங்கிடம் விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 50 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேற ராஜஸ்தான் அணிக்கு இருந்த வாய்ப்பும் குறைந்து கொண்டே வந்தது.

சஞ்சு சாம்சன் கூறியது :
ஆனால், தேவ்தத் படிக்கல் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பிறகு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் வெற்றிக்குப் பிறகும் சற்று ஏமாற்றத்துடன் காணப்பட்டார். போட்டியின் பிந்தைய விளக்கக்காட்சியில் பேசிய சஞ்சு சாம்சன், “விளையாட்டின் முடிவில் ஹெட்மியர் அடித்து ஆடிக்கொண்டிருந்த போது நாங்கள் 18.5 ஓவர்களில் போட்டியை முடிப்போம் என்று நினைத்தோம்.
எங்களிடம் ஒரு சிறந்த அணி இருக்கிறது. இருந்த போதிலும் புள்ளிபட்டியலில் எங்கு இருக்கிறோம் என்பதைப் பார்ப்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஜெய்ஸ்வாலை பற்றி பேசி வருகிறேன். அவர் தொடந்து முதிர்ச்சியான விளையாட்டை காட்டியுள்ளார். 100 டி20 போட்டிகளில் விளையாடியது போல் அவர் விளையாடுகிறார் என்றார் சாம்சன்.

மேலும் பேசிய அவர் தொடர்ந்து பேசுகையில் ட்ரென்ட் போல்ட்டைப் பாராட்டிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் “90 சதவீத நேரங்களில் ட்ரென்ட் போல்ட் முதல் ஓவரிலேயே கண்டிப்பாக விக்கெட்டை எடுப்பார் என்று நினைத்தோம். அதனை அவர் செய்தும் காட்டுகிறார். கடந்த சில போட்டிகளில் நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம். இன்று வெற்றியடைந்து மகிழ்ச்சியாக இருந்தாலும் புள்ளி பட்டியலில் உள்ள இடத்தை நினைத்து வருந்துகிறேன் என்றார் சாம்சன்.





