இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்த நாட்களில் ஐபிஎல் விளையாடுவதில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். யுஸ்வேந்திர சாஹல் தனது பந்துவீச்சால் ஐபிஎல் போட்டியில் ஒரு அதிர்ச்சியை உருவாக்கியவர். இவர் தற்போது 8 விக்கெட்டுகளுடன் ஊதா நிற தொப்பிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

இப்படி உவேந்திர ஷாகள் ஐபிஎல் போட்டியில் பிஸியாக இருந்த போதிலும் யுஸ்வேந்திர சாகலின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நிறைய விஷியங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகிறது. குறிப்பாக அவரது மனைவி தனஸ்ரீ வர்மா மீது மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதற்கிடையில், யுஸ்வேந்திர சாஹல் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. யுஸ்வேந்திர சாஹல் 23 ஜூலை 1990 இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் மற்றும் தாய் சுனிதா தேவி ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இல்லத்தரசி. சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டை விரும்பும் யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் நல்ல முத்திரை பதித்தவர். இந்நிலையில் தனது பெற்றோரை நினைவுகூர்ந்து, சமூக வலைதளங்களில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ள அவர், அதில் ஓல்ட் இஸ் கோல்ட் என்று தலைப்பிட்டு, ஹார்ட் ஈமோஜியையும் போட்டுள்ளார்.

இந்த விஷியம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா, இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயருடன் இந்த நாட்களில் நெருக்கமாகி வருகிறார் என்று கூறப்படுகிறது. அத்தகைய நிலையில் தான் அவர்களின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது ரம்ஜான் நோம்பு நடந்து வருவதினால் அதில் தனஸ்ரீயின் தோழி அவளை நோன்பு இப்தார் விருந்துக்கு அழைத்தார்.

இந்த நிகழ்வின் போது ஸ்ரேயாஸ் ஐயருடன் தனஸ்ரீ வர்மா செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார், புகைப்படத்தை பகிர்வதோடு, ஐயரை தனது பெஸ்டி என்று வர்ணித்து, அவர் ஒரு முத்த ஈமோஜியையும் வைத்தார். அந்த இன்ஸ்டா ஸ்டோரி வைரலாக நிலையில் ரசிகர்கள் பலரும் தனஸ்ரீயை ட்ரோல் செய்து யுஸ்வேந்திர சாஹலை ஏமாற்றியதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.





