ஐபிஎல் 2023 இன் 62வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற எய்டன் மார்க்ரம் பந்துவீச முடிவு செய்தார்.இந்நிலையில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அபார சதம் அடித்தார். சாஹா ஆட்டமிழந்த பிறகு, சாய் சுதர்சனுடன் இணைந்து கில் இன்னிங்ஸைக் கையாண்டு சதம் அடித்தார்.

அவர் 58 பந்துகளில் 1 சிக்ஸர்-13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். ஐபிஎல்லில் சுப்மன் கில் அடித்த முதல் சதம் இது என்று என்பது குறிப்பிடதக்கது. மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த சாய் சுதர்சன் 36 பந்துகளில் 47 எடுத்து ஆட்டமிழந்தார்.இவர்கள் இருவரையும் குர்ஜரத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உட்பட எந்த பேட்ஸ்மேனும் 10 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. இறுதியில் குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கத்திலேயே தடுமாறி அன்மோல்ப்ரீத் சிங் முதல் ஓவரிலேயே 5(4) முகமது ஷமியிடம் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு ஹைதராபாத் அணி சீட்டுக்கட்டுகளை சிதறின. இருந்த போதிலும் அதற்கு பிறகு களமிறங்கிய புவனேஷ் குமார் மற்றும் கிளாசன் பொறுமையாக ஆடி பார்ட்னர் ஷிப்பை உருவாக்கினர். அதோடு அற்புதமாக ஆடிய கிளாசன் 35 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

ஆனாலும் தனி ஆளாக போராடிய கிளாசன் 16.5 ஓவர்களில் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு பொறுமையாக ஆடிய புவனேஷ்வர் குமார் 27 பந்துகளில் ஆட்டமிழந்தார். இறுதியில் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியின் முலம் சிறப்பாக இதுவரையில் ஆடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்லும் முதல் அணியாக முன்னிலை வகிக்கிறது.
That HUNDRED feeling 🤗
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
Follow the match ▶️ https://t.co/GH3aM3hyup #TATAIPL | #GTvSRH | @ShubmanGill pic.twitter.com/C9UyUBvHd1
சுப்மன் கில் :
நான் SRHக்கு எதிராகத்தான் ஐபிஎல்லில் முதல் போட்டியை விளையாடினேன். அவர்களுக்கு எதிராக எனது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளதில் இருந்து வாழ்க்கை ஒரு முழு வட்டத்திற்கு வந்துவிட்டது. இன்னும் இப்படி பலர் வருவார்கள் என்று நம்புகிறேன். இது பந்துவீச்சாளர்கள் மற்றும் சூழ்நிலையைப் பற்றியது. மேலும் என்னுடைய கடந்த இன்னிங்ஸைப் பற்றி நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை.
அடுத்து எதிர்கொள்வதை மட்டுமே கவனம் செலுத்துவது முக்கியம். அபிஷேக் சர்மா பந்தில் சிக்ஸர் அடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அபிஷேக் சர்மா என்னிடம் பந்து வீசும் போதே நீ எனக்கு பந்து வீசினால் நான் சிக்ஸர் அடிப்பேன் என்று கூறியதாக தெரிவித்தார் சுப்மன் கில்.




