ஐபிஎல் 2023 இன் 62வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த இளம் தொடக்க வீரர் ஷுப்மான் கில் அதிரடியாக பேட்டிங் செய்தார். அபாரமாக சதம் அடித்தார். இந்த போட்டியில் கேப்டன் முதலில் டாஸ் வென்ற எய்டன் மார்க்ரம் பந்துவீச முடிவு செய்தார்.

இந்நிலையில் டாஸை இழந்து முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அபார சதம் அடித்தார். சாஹா ஆட்டமிழந்த பிறகு, சாய் சுதர்சனுடன் இணைந்து கில் இன்னிங்ஸைக் கையாண்டு அதிககாம சதம் அடித்தார்.அவர் 58 பந்துகளில் 1 சிக்ஸர்-13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். ஐபிஎல்லில் சுப்மான் கில் அடித்த முதல் சதம் இது என்று என்பது குறிப்பிடதக்கது.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் உட்பட அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பாராட்டுகளையும் பெற்றுள்ளார் சுப்மான் கில்.இந்த போட்டியில், ஷுப்மான் கில் தவிர, சாய் சுதர்சனும் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால் அவர் 36 பந்துகளில் 47 ரன்களை விளாசிய அவர் தனது அரை சதத்தை தவறவிட்டார். 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 47 ரன்கள் எடுத்தார்.
Chill and Thrill – Shubman Gill..
— cricketismylife (@Helpingfriend35) May 15, 2023
56 balls century… What a knock… @ShubmanGill @IPL @cricbuzz #TATAIPL #TATAIPL2023 #IPL2023 #shubmangill #gill #IPLUpdate #GujaratTitans #GTvsSRH #SRHvsGT pic.twitter.com/xDApfyZZ9H
இவர்கள் இருவரையும் குர்ஜரத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உட்பட எந்த பேட்ஸ்மேனும் 10 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை.இந்தப் போட்டியின் முதல் இன்னிங்கில் புவனேஷ்வர் குமார் ஹைதராபாத் அணியில் 5 விக்கெட்டுகளையும், ஜான்சன், ஃபருக்கி மற்றும் நடராஜன் 1-1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கத்திலேயே தடுமாறி அன்மோல்ப்ரீத் சிங் முதல் ஓவரிலேயே 5(4) முகமது ஷமியிடம் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு ஹைதராபாத் அணி சீட்டுக்கட்டுகளை சிதறி அபிஷேக் சர்மா 1.4 ஓவரில் 4(5) ரன்களில் ஆட்டமிழக்க ராகுல் திரிபாதி அடித்த ஓவரிலேயே ஷமியிடம் ஆட்டமிழந்தார். பிரமாதமாக பந்துவீசிய ஷமி வீசிய 5வது ஓவரில் கேப்டன் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தினார்.
மேலும் குஜராத் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மா ஒரே போவரில் சன்விர் சிங் மற்றும் சமத் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இந்த செய்தியை எழுதும் வரையில் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி 9 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்களை 59 எடுத்துள்ளது.





