ஐபிஎல் 2023 தொடரில் 61 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற சேனனி அணி பேட்டிங் செய்யும் தேர்வு செய்தது. ஆனால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் அடுத்ததாக களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பாக ஆதி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து பேட்டி கொடுக்கும் போது வர்ணனையாளரின் கொள்விகளுக்கு தோனி பதில் கொடுத்துகொன்றிடுந்தார். அதற்கு பிறகு மஹேந்திர சிங் தோனியிடம் ரின்கு சிங் ஆட்டோகிராப் வாங்கினார். மேலும் மைதானத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி CSK ஜெர்சிகளை வழங்கி கொண்டிருந்த போது தீடீரென தோனியிடம் சின்ன குழந்தை போல ஓடிவந்த இந்திய அணியின் முன்னாள் மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் தோனியை சந்தித்தார்.
அதன் போது இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர் அன்பு பாராட்டினார்கள். அதன் பிறகு தோனி லிட்டில் மாஸ்டர் கவாஸ்கரின் சட்டையில் தன்னுடைய ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
𝙔𝙚𝙡𝙡𝙤𝙫𝙚! 💛
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
A special lap of honour filled with memorable moments ft. @msdhoni & Co. and the ever-so-energetic Chepauk crowd 🤗#TATAIPL | #CSKvKKR | @ChennaiIPL pic.twitter.com/yHntEpuHNg
இந்நிலையில் தான் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் கவாஸ்கர் பேசுகையில் “போட்டி முடிந்ததும் தோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் என்று தெரிந்ததுமே அந்த நேரத்தில் ஏதாவது ஸ்பெஷல் நினைவை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் எம்எஸ் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக நான் ஓடினேன். அது சேப்பாக்கத்தில் அவர் விளையாடிய கடைசி சொந்த மண் போட்டியாகும்.
Proof that @msdhoni is the legend of legends!
— Star Sports (@StarSportsIndia) May 15, 2023
During @ChennaiIPL's lap of honour for their wonderful fans, #SunilGavaskar rushed to Dhoni and a truly #Yellovemoment was created by the two legends!
Tune-in to #IPLOnStar LIVE every day.#BetterTogether pic.twitter.com/hzDDdMkYjG
இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு நான் தகுதி பெற்றால் அவர்கள் மீண்டும் சேப்பாக்கத்தில் விளையாடுவார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அந்த தருணத்தில் நான் ஸ்பெஷல் நினைவை ஏற்படுத்த விரும்பினேன். அந்த சமயத்தில் கேமரா மேன் ஒவ்ரவர் எனக்கு பேனா கொடுத்தார். அதனால் அந்த நபருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பின்னர் தோனியிடம் சென்று நான் அணிந்திருந்த சட்டையில் ஆட்டோகிராப் போட சொன்னேன்.
Sunil Gavaskar is getting emotional while talking about MS Dhoni 💛pic.twitter.com/wjKKpGQcsH
— 🎰 (@StanMSD) May 16, 2023
அதை அவர் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த தருணம் எனக்கு உணர்ச்சிகரமாகவும் இருந்தது. ஏனெனில் தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். கபில் தேவ் 1983 உலக கோப்பையை தூக்குவது மற்றும் 2011 உலகக் கோப்பை வென்ற ஃபைனலில் எம்எஸ் தோனி அடித்த அந்த சிக்சர் ஆகியன நான் கண் மூடுவதற்கு முன்பாக பார்க்க விரும்பும் 2 தருணங்களாகும் என்று கூறினார் காவஸ்கர்.





