உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடிய நிலையில் 6 வெற்றிகளை பதிவு செய்து தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதோடு சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை அணி இந்த வருடம் கண்டிப்பாக வெற்றியடையும் என்று ரசிகர்கள் நம்பி வரும் அதே நேரத்தில் சோகத்திலும் இருக்கின்றனர்.

ஏனெற்றால் தோனிக்கு வரும் ஜூலை 7ஆம் தேதியோசு 42 வயதாகிறது அதோடு சென்னை அணியில் இருந்து ஓய்வு எடுப்பது குறித்து அவரே சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதவது ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சென்னை எதிராக விளையாடினாலும் சென்னை அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு ரசிகர்கள் தோனிக்கு ஆதரவு தொடுத்தனர். மேலும் இதன் போது தோனி கூட இவர்கள் எனக்கு வழியனுப்ப வந்திருக்கிறாரகள் என்று கூறினார்.
இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழந்த நிலையில் சமீபத்தில் வர்ணனையாளர் டேனி மோரிசன் தோனியுடம் உங்களுடைய கடைசி சீசனை கொண்டாடுகிறீர்களா என கேட்க தோனி அதை நீங்கள் தான் கூறினீர்கள் என்று தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் தோனி இன்னமும் விளையாடுவார் என்ற நம்பிக்கை கிடைத்து. அப்படிப்பட்ட நிலையில் தான் தோனியின் நெருங்கிய நண்பரும், சென்னை அணியின் சின்ன தல எந்த அந்தஸ்துடன் இருக்கும் ரெய்னா தோனி ஓய்வு குறித்து கூறியுள்ளார்.
Picture of the day – MS Dhoni with Suresh Raina.
— Johns. (@CricCrazyJohns) May 6, 2023
The heart & soul of CSK. pic.twitter.com/kBowsOATLq
ரெய்னா கூறிய நற்செய்தி :
அதாவது சென்னை vs முன்பை போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திக்கும் போது ரெய்னா சில விஷியங்ககளை பகிர்ந்து கொண்டார். அப்போது ரெய்னாவிடம் செய்தியாளர் ஒருவர் தோனி ஓய்வு பெறுவதை பற்றி கேட்பீர்களா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரெய்னா “ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு இன்னமும் ஒரு வருடம் விளையாடுவேன் என்று தோனி கூறியதாக ரைனா ஜியோ சினிமாவில் கூறினார்.

மேலும் மிகச் சிறப்பாக விளையாடிவரும் தோனி தலைமையிலான சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை ஒட்டுமொத்த இந்தியாவும் விரும்புகிறது என்று நினைக்கிறேன் என கூறினார். இருப்பினும் உடல் நிலையைப் பொறுத்து அவர் விளையாடலாமா அல்லது ஓய்வு எடுக்கலாமா என்ற இறுதி முடிவை எடுப்பார் என்று கூறினார் ரெய்னா.

ரசிகர்கள் மகிழ்ச்சி :
மேலும் எனக்குத் தெரிந்தவரை அவர் இன்னும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடுவார் என்று தெரிவித்தார் ரெய்னா. இதனால் தற்போது சிறப்பாக விளையாடிவரும் சென்னை அணி இந்த சீசனில் கோப்பையை வெல்லும் என்பதில் அனைவருமே உறுதியாக இருக்கும் நிலையில் கோப்பையை வென்ற பிறகும் தோனி ஒரு வருடம் விளையாடுவார் என்ற செய்து ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





