சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் போன்ற கிரிக்கெட் லீக்கிலும் தன்னுடைய அசாதாரமான பேட்டிங் திறமையால் கலக்கிய சுரேஷ் ரெய்னா தற்போது புதிய தொழிலில் இறங்கியுள்ளார். அது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரெய்னா இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனக்கு பின்னால் ஒரு சரித்திரத்தயே விட்டு சென்றிருக்கிறார்.

ரெய்னா அவருடைய அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் போனவர். சரியான ஷாட்டை விளையாடுவதில், அதன் மூலம் ரன் ரேட்டை அதிரடியாக அதிகரித்து அணிக்கு எப்போதெல்லாம் ரன்கள் தேவைப்படுமா அப்போதெல்லாம் சிறப்பாக எந்த வகையான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அவரின் பங்களிப்பு அபாரமாக இருக்கும். அதே போல மைத்தனத்தில் மனிதநேயமாக இருந்தாலும் சரி விளையாட்டு திறனிலும் அணி வீரர்களிடம் மட்டுமல்லாமல் எதிரணி வீரர்களிடமும் மதிப்பு பெற்றவர் ரெய்னா.
மேலும் போட்டிகளில் இவருடைய தன்னம்பிக்கையிலும், அர்ப்பணிப்பிலும் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர், ஐபிஎல் போட்டிகளில் இதுவரையில் 5528 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 5615 ரன்களும், T20 போட்டிகளில் 1604 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 768 ரன்களும் என இவருடைய பங்களிப்பு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரியது. மேலும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தினால் சின்ன தல என்ற படப்பெயரையும் பெற்றார்.

ஆனால் கடந்த 2021 போட்டியின் போது காயம் காரணமாக அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா விளையாடிய நிலையில் அதற்கு பிறகு ரெய்னா எந்த அணியிலும் இடம்பெறவே இல்லை. இறுதியில் கடந்த ஆண்டு 2022 செப்டம்பர் 6ஆம் நாள் இந்தியா கிரிக்கெட்டில் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதை அறிவித்தார். சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட்டில் ஓய்வெடுத்த போதிலும் ரெய்னா இந்தியா தவிர்த்து மற்ற கிரிக்கெட் லீக் ஆட்டங்களில் இன்னமும் விளையாடி வருகிறார்.
View this post on Instagram
இந்நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தான் “ரெய்னா இந்திய உணவகம்” என்ற பெயரில் ஒரு உணவகத்தை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நிறுவியுள்ளதாக புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் “நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் தொடங்கியிருக்கும் உணவகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி. உணவு மற்றும் சமையலில் என்னுடைய ஆர்வம் என்ன என்பதை குறித்து இது தெரிவிக்கும்.
உணவுகளின் மீது எனக்குள்ள விருப்பத்தை நீங்கள் அனைவரையும் அறிவீர்கள். மேலும் இந்த உணவகத்தின் மூலம் இந்தியாவின் வடக்கு முதல் தெற்கு வரையுள்ள உணவுகளை ஐரோப்பாவின் இதயத்திற்கு கொண்டுவந்துளேன், நிச்சயம் எங்களினால் சுவையான உணவுகளை கொடுக்க முடியும் என்று நீண்ட பதிவை போட்டிருந்தார்ரெய்னா. இந்த பதிவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





