ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் போட முடிவு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 10 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே அடித்து ஹ்ரிதிக் சோக்கினிடம் விக்கெட்டை பறி கொடுத்து மீண்டும் டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

அணியின் கேப்டன் வார்னர் 47 பந்துகளில் 51 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் பறிகொடுத்தார்.19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்தன. 173 என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 36 பந்துகளில் 68 ரன்களை பூர்த்தி செய்தனர்.
அதன் பின் நிதானமாக கேப்டன் ரோகித் சர்மா ஆடிய ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்களை எடுத்தார். எளிதாக வெல்லக்கூடிய போட்டியை மும்பை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 0 ரன்களில் ஆட்டமிழந்து மும்பை அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார்.
இந்திய அணியில் சூர்யகுமார்
சூர்யகுமார் யாதவிற்கு நீண்ட காலத்திற்கு பிறகு தான் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் சேர்ந்தார்.14 மார்ச் 2021-ஆம் ஆண்டு T20 இன்டர்நேஷனல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தான் இவர் முதல் முறை அறிமுகமானார். அணியில் சேர்ந்ததில் இருந்து அதிரடியாக விளையாடி Mr.360 டிகிரி என்று அனைத்து மக்களாலும் அழைக்கப்பட்டார்.ICC T20I தர வரிசையில் முதலாக இருந்து வருகிறார். அதன் பின் ஒரு நாள் போட்டிகளில் அவரால் சரிவர விளையாட முடியவில்லை.

தற்போது நிலையில் சூர்யகுமார்
சூர்யகுமார் யாதவ் நன்றாக விளையாடிய காரனத்தால் 18 ஜூலை 2021-ம் ஆண்டு ஒரு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அணியில் இடம் பெற்றார். இந்த வருடம் 3 தொடர்களை கொண்ட ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த மூன்று போட்டிகளிலும் 0 என்ற நிலையில் டக் அவுட் ஆகி சென்று அணிக்கு மிக பெரிய ஏமாற்றத்தை அளித்தார்.அதன் தொடர்ச்சியாகவே இந்த வருடமும் அவருக்கு ஐபிஎல் தொடர்களில் சொதப்பி கொண்டு வருகிறார். இந்த வருடம் மும்பை அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவினர். அப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 15 ரன்களை மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
जब इसकी गाड़ी चलती है तो लगता है की आसमान छू लेंगे लेकिन जब ये पटरी से उतरती है तो मंजिल छोड़िए, रास्ते भी डरवाने लगने लगते है ।
— Bhupendra Kumar|भुपेन्द्र कुमार| (@KrBhupendraa) April 11, 2023
ख़ैर! वक्त की नियति है की वो बदलता जरूर है, ये वक्त भी जल्दी बीतेगा…ये अंधेरा छटेगा और नवा सूरज भी निलकेगा… #SuryakumarYadav@surya_14kumar pic.twitter.com/9Ki2d9ImU9
அதன் பின் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன்னை மட்டும் எடுத்து அவுட்டாகி சென்றார்.அப்போட்டியிலும் மும்பை அணி தோற்றது. அதன் தொடர்ச்சியாகவே நேற்று நடைபெற்ற போட்டியில் 0 என்ற நிலையில் டக் அவுட்டாகி வெளியேறினார். இப்போட்டியில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.





