ஐபிஎல் 2023ல் இன்று மிகவும் அற்புதமான ஆட்டம் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து 218 ரன்கள் குவித்தது.

இந்த ஸ்கோருக்கு மிகப்பெரிய பங்களிப்பு கொடுத்தது MR.360 சூர்யகுமார் யாதவ். மேலும் சூர்யா சதத்தை வெறும் 49 பந்துகளில் அடித்துள்ளார். பல போட்டிகளுக்கு பிறகு சூரியகுமார் இப்படி வான்கடே மைதானத்தில் விளையாடியதினால் பார்வையாளர்கள் முன்னிலையில் சூர்யா அதை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போட்டியை பொறுத்தவரையில் ஐபிஎல் 2023 லீக் தொடரின் 57 வது போட்டியை குஜராத் டைடன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பௌலிங்கை முடிவு செய்தார்.அதன் படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் அணிக்கு அதிரடியான தொடக்கத்தையே கொடுத்தனர். அதிரடியாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 29 ரன்கள் இருந்த நிலையில் ரஷித் கான் பந்தில் விக்கெட்டை இழந்தார்.
One of the most incredible shots of the night by Suryakumar Yadav.pic.twitter.com/cqqdH6EMER
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2023
இந்நிலையில் அதே ஓவரில் இஷான் கிஷன் 31 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். வதேராவும் ரஷித் சுழலில் சிக்கி 15 ரன்களில் வெளியேறினார். 14 ஓவர்களில் 139 ரன்களை குவித்தது மும்பை அணி. விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் சூரிய குமார் யாதவ் சிறப்பாக விளையாடினார்.
𝗢𝗻 𝗙𝗶𝗿𝗲 🔥@surya_14kumar brings up his 4th fifty in his last five innings 👏
— IndianPremierLeague (@IPL) May 12, 2023
Follow the Match: https://t.co/o61rmJX1rD#TATAIPL | #MIvGT pic.twitter.com/xcaFmZbXkX
#SuryakumarYadav lit the match, he is really the master at work 👑
— Akhilesh Yadav (@Akhiles69216731) May 12, 2023
What a player he is @surya_14kumar#MIvsGT
103 (49) pic.twitter.com/DrODy8mGwl
அற்புதமாக விளையாடிய சூர்யா 49 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார். மேலும் 20வது ஓவரில் அல்ஜாரி ஜோசப்பின் கடைசி பந்தில் ஃபைன் லெக்கில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார் சூர்யா. இதன் முலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்தனர்.





