ஐபிஎல் 2023 தொடரின் 52வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய RR அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் தனது மோசமான பார்மை விட்டுவிட்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி அவுட் ஆனார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரால் இந்த சீசனில் இதுவரை பேட் மூலம் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் அவரது பேட்டிங்கில் அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க முடிந்தது. இந்நிலையில் 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். ஆனால் பவர்பிளேக்குப் பிறகு பொறுமையாக விளையாடிய சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார்.
அதே நேரத்தில் பிரமாதமாக ஆடிய ஜோஸ் பட்லர் விரைவாக பேட்டிங் செய்து 59 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.இந்நிலையில் 215 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்படும் என்ற நிலையில் சமத் ஆட்டமிழந்தாலும் அது நோ பாலாக இருந்த்தால் அடுத்த பந்திலேயே சமத்ஸ் சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

இதுதான் ஐபிஎல் போட்டியின் சிறப்பே, கடைசி வரையில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியாது. அவர்களும் சரியாக பேட்டிங் செய்தார்கள். ஆனால் சந்தீப் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இதேபோன்ற சூழ்நிலையில் சிஎஸ்கேக்கு எதிரான ஆட்டத்தில் அவர் எங்களுக்கு போட்டியை வென்று கொடுத்திருக்கிறார். அவர் மிண்டும் அதேயே செய்து விக்கெட்டை எடுத்தார். ஆனால் அந்த ஒரு நோ பால் எங்களுடைய வெற்றியை பறித்து விட்டது.

நாங்கள் மிகவும் சரியாக பேட்டிங் செய்தோம் அதற்கான விக்கெட் தான் இதுவும் கூட. ஆனால் SRH சிறப்பாக விளையாடினார்கள். நோபல் பற்றி பேசுகையில் “சந்தீப்புக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். வேலை முடிந்தது என்று நினைத்த சில நொடிகளில் மனநிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் விளையாட்டின் இயல்பு அதுதான் என்று நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டியிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற வேண்டும். தொடர்ந்து தோல்வி அடைவது வருத்தமாக இருக்கிறது என்று கூறினார் சஞ்சு சாம்சன்





