ஐபிஎல் 2023லின் ஐந்தாவது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே பெங்களூரு எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மும்பை பேட்ஸ்மேன் திலக் வர்மா இப்படி ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். ஹெலிகாப்டர் ஷாட் விஷயத்தில் எம்எஸ் தோனியை போலவே அடித்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இப்போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் அப்போது ஹர்ஷல் படேல் பந்துவீசும்போது 19.6 ஓவரின் போது அவரது பந்துவீச்சில், திலக் வர்மா ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்தார். அதனை தொடர்ந்து பந்து 6 லைனை தாண்டியது.

இதன் மூலம் திலக் கணக்கில் 6 ரன்கள் எடுத்த அவர் நல்ல ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுத்தார். அவருடைய சிக்ஸர் மிகவும் சிறப்பாக இருந்தது. அதுவும் கடைசி பந்தில் திலக் வர்மாவின் ஹெலிகாப்டர் ஷாட் எம்எஸ் தோனியை நியாபகப்படுத்தியது. ஏனென்றால் எம்.எஸ்.தோனியும் கடைசி பந்தில் இதேபோன்ற ஷாட்களை ஆடித்தான் இன்னிங்ஸை முடிப்பார்.
Tilak Verma … wow! And the helicopter was a cherry in top. #IPL23 #MIvsRCB pic.twitter.com/xNzjH9BCyg
— Sheel Majumdar (@SheelMajumdar) April 2, 2023
திலக் வர்மா :
மும்பை இந்தியன்ஸ் டாப் பேட்ஸ்மேன்கள் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியடைந்தபோது, திலக் வர்மா ஒரு மதில் சுவராக சரிக்கின்றன மும்பை இந்தியன்ஸ் அணியை காப்பாற்றினார். இந்த போட்டியில் திலக் வர்மா 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளையும் அடித்தார். அவரைத் தவிர, நேஹால் வதேரா 21 ரன்களும், அர்ஷத் கான் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆனால் பின்னர் தங்களுடைய சொந்த மண்ணில் களமிறங்கிய ஆர்சிபி மிகப்பிரமாத்மாக விளையாடியது. ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெசீ மற்றும் விராட் கோலி இருவரும் கைகோர்த்து பிரமாதமாக ஆடினார்கள். விராட் கோலி 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார். அதோடு டு பிளெசீ 43 பந்துகளில் 73 ரன்கள் அடித்து எளிமையாக இலக்கை தொட்டு வெற்றிபெற்றனர். இந்நிலையில் எப்போதும் போல இப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்சியின் தொடக்க ஆட்டத்தில் தோற்று விட்டது.





