கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து வருகிறது.

இந்த போட்டியானது சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் மட்டுமே நடக்க இருக்கிறது. இந்த ஆறு அணிகளில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளும் மீதம் 2 அணிகளை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களும் வாங்கியுள்ளது. மேலும் லே போட்டிகள் பல முடிந்த நிலையில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சீட்டில் ஆர்கஸ் ஆகிய இரண்டு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
அப்படிப்பட்ட நிலையில் தான் பிளே ஆஃப் சுற்றை முடிவு செய்யும் போட்டியானது இன்று காலை இந்திய நேரப்படி சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் முதல் ஓவரிலேயை தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் ஆட்டமிழந்தார்.
Relive Mitch's blinder💛#SFUvTSK #WhistleForTexas #MajorLeagueCricket pic.twitter.com/6dMlVK7iHF
— Texas Super Kings (@TexasSuperKings) July 25, 2023
இதனையடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 13 பந்துகளில் ஆதமிழ்ந்து ஏமாற்றம் கொடுக்க சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணி தடுமாறியது. பின்னர் பொறுமையாக பாட்னர்ஷிப் அமைத்த சதாப் கான் 20 ரன்களிலும் கோரி ஆண்டர்சன் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க அதிரடியாக ஆடிய மேத்யூ வேட் 30 பந்துகளில் அற்புதமாக விளையாடி 49 ரன்கள் விளாசினார். ஆவாரோடு சைதன்யா பிஷ்னோய் 21 பந்துகளுடன் 35 ரன்களை விலாச சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது.
DON Sams🤠🔥💛#SFUvTSK #WhistleForTexas #MajorLeagueCricket pic.twitter.com/e9u72kvXs9
— Texas Super Kings (@TexasSuperKings) July 25, 2023
இதற்கு பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டு பிளசிஸ் ரன்கள் எதுவும் எடுக்கலாமல் ஆட்டமிழக்க, ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனென்றால் இந்த போட்டியில் வேண்டல் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். இந்நிலையில் காணவே பொறுமையாக ஆடி 27 பந்துகளில் 30 ரன்களை விளாச டேவிட் மில்லர் 10 ரன்களையும் சான்டனர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணிக்கு அழுத்தம் கூடியது.
The Super Kings Celebrate at Morrisville! 💛#SFUvTSK#WhistleForTexas #MajorLeagueCricket pic.twitter.com/SN0OIfjVS7
— Texas Super Kings (@TexasSuperKings) July 25, 2023
இருந்த போதிலும் சிறப்பாக விளையாடிய மிலிந்த் குமார் மற்றும் டேனியல் சாங்ஸ் இருவரும் ஓன்று சேர்ந்து அபாரமாக விளையாடி சென்னை அணிக்கு வெற்றியை கொடுத்தனர். இதில் மிலிந்த் குமார் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 42 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். மேலும் டேனியல் சாங்ஸ்2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 18 பந்துகளில் 42 ரன்களை விளாசி சென்னை அணிய பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றார். தற்போது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 2 வது இடத்தில் இருக்கிறது. மேலும் நாளை கடைசி லீக் போட்டியில் MI NY மற்றும் SFU அணிகள் மோதுவது குறிபிடதக்கது.





