ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முன், மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரன்டு அணிகளுமே வெற்றியை பதிவு செய்யய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஆனால் இன்று நடக்கும் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறுவதால், அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. இந்நிலையில் முதலில் டாஸ் வெற்ற மும்பை பந்துவீச முடிவு செய்தது. ஆரம்பதிலையே சொதப்பி வந்தனர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.
மறுபுறம் தடுமாற்றத்தை சந்தித்த குர்பாஸ் 8 ரன்களிலே வெளியேறினார். அதற்க்கு பிறகு வந்த கேப்டன் ரானாவும் 5 ரன்களிலே வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தார். யார் வெளியேறினாலும் அதிரடியாகவே விளையாடி 23 பந்துகளில் அரை சதத்தை அடைந்தார். அற்புதமாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அதன் பின் யாரும் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதன் முறையாக தன்னுடைய ஐபிஎல் போட்டியை ஆடியிருக்கிறார். இந்தப் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதன் போது அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை விளாசினார்.

இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை வெங்கடேஷ் ஐயர் பெற்றுள்ளார். இதற்கு முன், பிரண்டன் மெக்கல்லம் 15 ஆண்டுகளுக்கு முன் இந்த சாதனையை செய்துள்ளார். அவரது அபாரமான ஆட்டத்திற்கு பிறகு அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.





