ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டி எப்படியோ பல தடைகளுக்கு பிறகு நேற்று அஹமதாபத்தில் CSK vs GT போட்டியில் சென்னை ஜடேஜாவின் அற்புதமான ஆட்டத்தினால் வெற்றி பெற்றது. இதன் மூலம் தோனி மற்றும் சென்னை அணி 5முறை ஐபிஎல் பைனல் போட்டிகளில் வென்று ஐபிஎல் தொடரில் மும்பையின் சாதனையை சமன் செய்துள்ளனர். ஆனால் இந்த வெற்றி கிடைக்காமல் கூட போயிருக்கு 75 சதவிகிதம் வாய்ப்பு இருந்தது.

25 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பிருந்த நிலையில் இந்த போட்டியின் 2வது ஓவரின் போது பெரிய சம்பவம் நடந்தது. அதாவது 2வது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீச வந்தார். அப்போது 1.4வது பந்தின் போது சுப்மன் கில் புல்லர் லெந்த் பந்தை அடிக்க முயற்சி செய்தார். அது நேரடியாக தீபக் சஹார் கைகளுக்கு சென்றது. ஆனால் அந்த பந்தை தவறவிட்டார் அது தோனிக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் சுப்மன் ஒரு அதிரடி வீரர் என்பது அனைவருக்குமே தெரியும்.
அப்படிப்பட்ட நிலையில் தான் 7வது ஓவரை வீச வந்தார் ஜடேஜா அப்போது இந்த ஓவரின் கடைசி பந்தில் கில் வெளியே சென்று பந்தை அடிக்க முயற்சி செய்கையில் தோனி அற்புதமான விக்கெட் கீப்பிங்கின் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தினார். அது அணிக்கு மிகவும் முக்கியமான விக்கெட் என்பதினால் மைத்தனமே அதிர்ந்தது. அதுவே வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது.
MS Dhoni reaction when Deepak Chahar came for autograph 😂#MSDhoni𓃵 | #CSKvsGT | #IPL2023Finals | #MSDhoni
— Abhi (@abhi_is_online) May 29, 2023
pic.twitter.com/Qe4qGY7B1K
இந்நிலையில் போட்டி முடிந்ததும் அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கும் போது தீபக் சஹார் தொனியிடம் சென்று சட்டையில் ஆட்டோககிராப் கேட்டார். ஆனால் தோனி முதலில் அதெல்லாம் போடமுடியாது கிளம்பு என்பதை போல ரியாக்சன் கொடுத்தார். அதற்கு பிறகு தோனி தீபக் சஹாரிடம் எத்தனையோ கூறி திட்டியபடி ஆட்டோகிராப் போட்டு குடுத்தார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதற்கு முன்னர் கூட தோனி சஹாருடன் பல முறை கேடிக்கையாக விளையாடி இருக்கிறார், ஒருமுறை பேட்டிங் செல்வதற்கு முன்னர் பேட்டை கொண்டு முகத்தில் அடிக்குமாறு கொண்டு சென்றார். அதனால் சஹார் அங்கிருந்து ஓடிவிட்டார். அதற்கு பிறகு ஒரு முறை சஹார் பேசிக்கொண்டிருக்கும் போது அவருடை தலையில் தட்டுவது போன்று செய்தார், மேலும் நேற்று நடத்த போட்டிக்கு முன்னர் கூட சஹார் தோனியிடம் விளையாட்டு காட்டியது குறிப்பிடதக்கது.





