இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் எப்போதும் தங்கள் மகள் வாமிகாவை சமூக ஊடகங்களின் பார்வையில் இருந்து விலக்கியே வைப்பார்கள். இருப்பினும் வாமிகா எப்போதும் சோசியல் மீடியாவில் பிரபலமானவராக இருக்கிறார். அப்படியொரு இலையில் தான் மீண்டும் வாமிகா பற்றி சோசியல் மீடியாவில் சர்ச்சையானது வெடித்தது.

இந்த சம்பவம் ஐபிஎல் போட்டியின் போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே ஒரு போட்டியில் நடந்தது. இந்த போட்டியில் அதிகமான சிக்ஸர் மழை பெய்தது. மேலும் வந்த போட்டியில் ரசிகர்கள் பல்வேறு வகையான போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை ஏந்தி சென்றனர் அவர்களது அணியை ஊக்குவித்தனர். அதில் ஒரு சிறு குழந்தை வாமிகாவைப் பற்றிய செய்தி எழுதப்பட்ட போஸ்டரைப் பிடித்திருந்தார்.
அந்த போஸ்டரில், ‘ஹாய் விராட் அங்கிள், வாமிகாவை டேட்டிங் அழைத்துச் செல்லலாமா’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்படியொரு போஸ்டரைப் பார்த்ததும் சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலானது. விராட் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அனைத்து சோசியல் மீடியாக்களில் பரப்பினார்கள். இதனால் பல நெட்டிசன்கள் குழந்தையின் பெற்றோரை கடுமையாக விமர்ச்சித்தனர். சிலர் பாராட்டவும் செய்து அழகாக இருப்பதாக கூறினார்கள்.

கங்கனா கூறியது :
அந்த வகையில் தான் பாலிவுட்டில் வெளிப்படையான கருத்துக்களால் பிரபலமான நடிகை கங்கனா ரனாவத், குழந்தையின் பெற்றோரையும் கண்டித்துள்ளார். அவர் தன்னுடைய தன்னுடை சோசியல் மீடியாவில் குழந்தையின் முகத்தை மறைத்து போஸ்டரை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை கங்கனா பகிர்ந்துள்ளார். இந்த படத்துடன “இந்த முட்டாள்தனமான விஷயங்களை அப்பாவி குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டாம். இது உங்களை நாகரீகமற்றவர்களாக தோற்றமளிக்கிறதே தவிர மார்த்தானாகவும் சரியாகவும் தெரியவில்லை என்று பதிவிட்டிருந்தார்.

கங்கனாவின் கருத்துக்கள் அவரது ரசிகர்களிடமிருந்து சில ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் பலர் குழந்தை மற்றும் அவரது பெற்றோரை விமர்சித்துள்ளனர். மற்றவர்கள் நடிகை கங்கனா இதுபோன்ற தேவையற்ற கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பினர். இந்நிலையில் ஒரு போஸ்டரினால் வந்த பிரச்னை தற்போது பூதாகரமாக மாறி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.





