இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொண்டது. தொடர் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி உள்ளது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பௌலிங்கை போட முடிவு செய்தது.பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அணியின் கேப்டன்னுடன், விராட் கோலியும் களமிறங்கினார். ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய டுபிளிசிஸ் 16 பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு 22 ரன்களை எடுத்த நிலையில் மார்ஷிடம் விக்கெட்டை இழந்தார்.

அதற்கு பிறகு நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார் விராட் கோலி. 33 பந்துகளிலே தனது அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில், அதற்கு பிறகே தனது விக்கெட்டை லலித்திடம் பறிகொடுத்தார். அதன் பின் விளையாட வந்த மேக்ஸ்வெல் ஆரம்பத்திலே அதிரடியை காட்டினார். லோம்ரோர் 26 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ஆனாலும் மேக்ஸ்வெல் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடி வந்தார்.
யாரும் எதிர்பாரத நிலையில் வந்த ஹர்ஷல் பட்டேல் தனது கடைமைக்கு ஒரே ஒரு சிக்சரை அடித்து அக்சர் பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து வரிசையாக அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ்வெலும் குல்தீபிடம் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து சென்ற நிலையில் அதன் பிறகும் வந்த தினேஷ் கார்த்திக்கும் ரன்களை எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். நன்றாக விளையாடி கொண்டு இருந்த பெங்களூரு தடுமாற்றத்தை சந்தித்தனர்.
Virat Kohli stares at Sourav Ganguly. Moment of the Match. King Kohliiiiii. 💉💉💉💉❤️❤️ pic.twitter.com/MphUgmEpUV
— S. (@Sobuujj) April 15, 2023
இன்னிங்சை ஆரம்பித்த போது 200 ரன்களை எட்டும் என எதிர்பார்த்தனர். இருப்பினும் அந்த அணியின் மிடில் ஆர்டர் வலிமையாக இல்லாத காரனத்தால் பெங்களூரு அணி 174 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இருந்த போதிலும் பின்னர் களமிறங்கிய டெல்லி அணியால் அந்த ரன்களையே சமாளிக்க முடியாமல் தவித்தனர். இறுதியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது விராட் கோலியின் அரை சதம்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சவுரவ் கங்குலியிடம் விட்டார் கோலி நடந்து கொண்ட விதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உண்மையில், சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோதுதான் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி நீக்கப்பட்டார். இதனால் இருவருக்குள் நிறையப் பிரிவினை இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து தான் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.ஏனெற்றால் பீல்டிங்கின் போது கூட, விராட் கோலி சவுரவ் கங்குலியை முறைத்துப் பார்த்தார். அதேசமயம் போட்டி முடிந்து கைகுலுக்கும் நேரத்தில் கூட கங்குலியுடன் விராட் கோலி கைகுலுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது





