ஐபிஎல் 2023தொடரின் 51வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. ஏற்கனவே குஜராத் அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்த போட்டியையும் வெற்றிபெறும் முனைப்பில் இருக்கிறது குஜராத்.

அதே சமயத்தில் லக்னோ அணியின் முக்கிய வீரரும் கேப்டனுமான கேஎல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் லக்னோ அணி இருக்கிறது. இந்நிலையில் சின்ஹா போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் க்ருனால் பாண்டியா பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது தவறான விஷயம் என்று பிறகுதான் தெரிந்தது.
இந்நிலையில் முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடியது. அந்த வகையில் குஜராத் அணியின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய விர்த்திமான் மிகவும் சிறப்பாக விளையாடினார் 20 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் குஜராத் முதல் விக்கெட்டுக்கு 142 ரன் பார்ட்னர்ஷிப்பை இழந்தது. சாஹா 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்தார். சதத்தை நெருங்கும் போது பிரேரக் மன்காட் சிக்ஸர் அடிக்கும் போது அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்த விராட் கோலி ‘வாட் எ பிளேயர்’ என்று தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சஹா வெளியேறிய பிறகு அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 94 ரன்களை விளாசி சதம் அடிப்பதை தவறவிட்டார். இந்நிலையில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை விளாசியது. இந்நிலையில் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி சிறப்பாக ஆடி வருகிறது. இந்த செய்தியை எழுதும் வரையில்





