மே 18 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி சதத்தை அடித்த பிறகு, முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி SRH இன் வீரர்களுக்கு நினைவு பரிசுகளில் கையெழுத்திட்டார். விராட் கோலி சன் ரைசேர்ஸ் அணியின் SRH ஜெர்சி மற்றும் தொப்பியில் கையெழுத்திட்டதை ஐபிஎல் இன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கைப்பிடி பின்னர் பகிர்ந்து கொண்டது. அந்த வீடியோ தான் தபோது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி பதிவு செய்த்தது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத்திற்கு சரியான தொடக்கம் இல்லை. சொல்லப்போனால் முதல் மூன்று ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத்.
ஒரு கட்டத்தில் ஹைதரபாத் 150 தண்டுவார்களா என்றிருந்த நிலையில் அதிரடியாக ஆடிய கிளாசனின் பேட்டிங்கினால் 150 ரன்களை தொட்டது ஹைதராபாத். மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிளாசன் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களின் முலம் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் கிளாசன். ஆனால் சதம் அடித்த அந்த ஓவரிலேயே கிளாசன் 51 பந்துகளை 104 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது ஹைதராபாத் அணி.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆர்சிபியின் தொடக்க ஜோடியான விராட் கோலி மற்றும் டு பிளேசிஸ் சிறப்பாக விளையாடினார்கள். மேலும் ஃபாஃப் டு பிளிசிஸ் 71 ரன்கள் எடுத்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது வாழ்க்கையில் 76வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இறுதியில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் விதியசத்தில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலிலும் மும்பையை கீழே தள்ளி 4வது இடத்திற்கு வந்தது.

இதற்கிடையில் ஆர்சிபியின் அடுத்த போட்டி மே 21 அன்று எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஒருவேளை குஜராத் அணிய ஆர்சிபி வீழ்த்தும் பட்சத்தில் பிளே ஆஃப் செல்வதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிடலாம். இருப்பினும் அந்த அணி மும்பை இந்தியன்ஸ் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.
ஐந்து முறை சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ரோஹித் சர்மா தலைமையிலான அணி RCBயை வீழ்த்தி அந்த இடத்தைப் பிடிக்கும். இருப்பினும், LSG அல்லது CSK தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் ஏதேனும் ஒரு புள்ளியை இழந்தால் RCB மற்றும் MIதகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.




