ஐபிஎல் 2023 இல் விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி இடையேயான வெறுப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதனை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ ஓன்று வைரலாகி உள்ளது. இது RCB மற்றும் DC இடையேயான போட்டியின் போது நடந்தது. இந்த போட்டியின் பல வீடியோக்கள் விராட் கோலியை பற்றியும் கங்குலியை பற்றியும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் மீண்டும் மற்றொரு புதிய வீடியோ வைரலாகி வருகிறது.
The way Virat Kohli looked at ganguly pic.twitter.com/pLoAzyn9EI
— itz_mksoni25 (@_itz_mksoni25) April 17, 2023
டெல்லி மற்றும் மும்பைக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் முதல் பந்துவீசிய டெல்லி அணி சிறப்பான பந்துவீச்சை தொடங்கவில்லை. சொல்லப்போனால் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கினார்கள். சிறப்பாக விளையாடிய விராட் 33 பந்துகளிலே தனது அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் மேக்ஸ்வெல் ஆரம்பத்திலே அதிரடியை காட்டினார். லோம்ரோர் 26 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ஆனாலும் மேக்ஸ்வெல் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடி வந்தார்.
இன்னிங்கை ஆரம்பித்த போது 200 ரன்களை எட்டும் என எதிர்பார்த்தனர். இருப்பினும் அந்த அணியின் மிடில் ஆர்டர் வலிமையாக இல்லாத காரனத்தால் பெங்களூரு அணி 174 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இருந்த போதிலும் பின்னர் களமிறங்கிய டெல்லி அணியால் அந்த ரன்களையே சமாளிக்க முடியாமல் தவித்தனர். இறுதியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது விராட் கோலியின் அரை சதம்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சவுரவ் கங்குலியிடம் விட்டார் கோலி நடந்து கொண்ட விதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உண்மையில், சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோதுதான் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி நீக்கப்பட்டார். இதனால் இருவருக்குள் நிறையப் பிரிவினை இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து தான் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏனெற்றால் பீல்டிங்கின் போது கூட, விராட் கோலி சவுரவ் கங்குலியை முறைத்துப் பார்த்தார்.

அதேசமயம் போட்டி முடிந்து கைகுலுக்கும் நேரத்தில் கூட கங்குலியுடன் விராட் கோலி கைகுலுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செல்ல தயாராக அமர்ந்திருந்தார். அப்போது சௌரவ் கங்குலி அவரை கடந்து சென்றார். இதன் போது விராட் கோலி சௌரவ் கங்குலி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





