ஐபிஎல் 2023 க்கான 67 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்து வந்தன. டெல்லி அணி புள்ளி பட்டியல் இருந்து எலிமினட் ஆனது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கையே தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே மற்றும் ருதுராஜ் அணிக்கு அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். இவ்விரு வரும் இணைந்து டெல்லி அணியின் பௌலிங்கை சிதறடித்து வந்தனர். 7 ஓவர்கள் முடிவில் 60 ரன்களை குவித்தனர். 37 பந்துகளிலே ருதுராஜ் அவருடைய அரை சத்தத்தை பூர்த்தி செய்தார். குல்தீப் யாதவ் வீசிய ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடினார் ருதுராஜ்.
மற்றொரு புறம் நிதானமாக விளையாடி வந்த கான்வே 33 பந்துகளில் அவருடைய அரை சத்தத்தை பூர்த்தி செய்ய 79 ரன்கள் இருந்த நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த டுபே மற்றும் கான்வே அற்புதமாக விளையாடி டெல்லி அணியின் பௌலிங்கை சிதறடித்தனர்.9 பந்துகளில் 22 ரன்களை அடித்து வெளியேற, தல தோனி களமிறங்கினார். இந்நிலையில் கான்வே 87 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த ஜடேஜா 7 பந்துகளிலே 20 ரன்களை அடித்கார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது சென்னை அணி.
The mind-games have hit a new high here in Delhi 😃#TATAIPL | #DCvCSK | @imjadeja | @davidwarner31
— IndianPremierLeague (@IPL) May 20, 2023
Watch the Warner 🆚 Jadeja battle here 🎥🔽 pic.twitter.com/o5UF6U2sAY
வைரல் வீடியோ :
இந்நிலையில் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்கின் 4.3 பந்தின் போது சாஹர் பந்துவீசினார். அப்போது அதனை வார்னர் ஷர்ட்டர் டீப் விக்கெட் திசையில் அடிக்க முயற்சி செத்தார். ஆனால் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இருந்தபோதிலும் வார்னர் இரண்டாவது ரன்கள் எடுக்க முயற்சி செய்தார் அப்போது பந்து ஜடேஜாவின் கைகளுக்கு சென்றது. அப்போதுதான் ஒரு சம்பவம் நடந்தது.
அதாவது ரன் ஓடுவது போன்று விளையாட்டு காட்டிய டேவிட் வார்னர் போட்டியின் போது ஜடேஜா பேட்டை வாழ் போல சுற்றி காட்டுவதை போல பேட்டை விளையாட்டாக சுற்றி காட்டினார். இந்த காட்சி ரசிகர்களை கொள்ளை கொண்டது. அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இரண்டாவது இன்னிங்கை பொறுத்தவரையில் 224 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே சொதப்பி வந்தது. ப்ரித்வி ஷா 5 ரன்களிலும் அதன் பின் வந்த சால்ட் 3 ரன்களில் வெளியேற ரூசோ ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியமால் திணறி வர யாஷ் தூள் 13 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில் இந்த செய்தியை எழுதும் வரையில் விக்கெட்டுகள் இழப்பிற்கு ஓவர்களில் ரன்களை எடுத்துள்ளது.





