ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை கோப்பையை கைப்பற்றும். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார்.

இந்நிலையில் இந்த போட்டியின் 2வது ஓவரின் போது பெரிய சம்பவம் நடந்தது. அதாவது 2வது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீச வந்தார். அப்போது 1.4வது பந்தின் போது சுப்மன் கில் புல்லர் லெந்த் பந்தை அடிக்க முயற்சி செய்தார். அது நேரடியாக தீபக் சஹார் கைகளுக்கு சென்றது. ஆனால் அந்த பந்தை தவறவிட்டார் அது தோனிக்கே அதிர்ச்சியாக இருந்தது.
சொல்லப்போனால் இப்படித்தான் குவாலிபயர் 2ல் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின இதில் மும்பை அணியின் டிம் டேவிட் சுப்மன் கில்லின் கேட்சை தவற விட்டார். அதற்கு பிறகு சுப்மன் கில் பிரமாதமாக ஆடி அதிரடியாக சதம் விளாசினார். அதன் காரணமாக மும்பை அணி பைனல் வாய்ப்பை தவற விட்டது. அப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது சுப்மன் கேட்சை தீபக் சஹார் தவறவிட்டது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
Lightning fast MSD! ⚡️ ⚡️
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
How about that for a glovework 👌 👌
Big breakthrough for @ChennaiIPL as @imjadeja strikes! 👍 👍#GT lose Shubman Gill.
Follow the match ▶️ https://t.co/WsYLvLrRhp #TATAIPL | #Final | #CSKvGT | @msdhoni pic.twitter.com/iaaPHQFNsy
அப்படிப்பட்ட நிலையில் தான் 7வது ஓவரை வீச வந்தார் ஜடேஜா அப்போது இந்த ஓவரின் கடைசி பந்தில் கில் வெளியே சென்று பந்தை அடிக்க முயற்சி செய்கையில் தோனி அற்புதமான விக்கெட் கீப்பிங்கின் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தினார். அது அணிக்கு மிகவும் முக்கியமான விக்கெட் என்பதினால் மைத்தனமே அதிர்ந்தது. அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும் 4 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்களை குவித்தார்கள். 4 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்களை குவித்தார்கள். 5.2 ஓவர்கள் முடிந்த நிலையிலே பார்ட்னர்ஷிப்பில் அரை சதத்தை பூர்த்தி செய்தனர். 39 ரன்கள் இருந்த நிலையில் தோனியின் ஸ்டேம்பிங்கின் மூலம் விக்கெடை இழந்தார் கில். இந்நிலையில் இந்த செய்தியை எழுதும் வரையில் ஓவர்களுக்கு விக்கெட்டை இழந்து ரன்கள் எடுத்துள்ளது.





