ஐபிஎல் 2023 தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.

சென்னை அணி 13 ஆட்டங்களில் 15 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது, இருப்பினும் சென்னை அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய சென்னை அணிக்கு இப்போது ஒரு வெற்றி மட்டுமே தேவை, மேலும் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியும், பெங்களூரு, மும்பை மற்றும் லக்னோ ஆகிய அணிகளில் ஏதேனும் ஒரு அணி கடைசி ஆட்டத்தில் தோற்றால் கூட தோல்வியுடன் தகுதி பெறலாம்.
டெல்லி அணிக்கு இழப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில் உள்ளது, இது அவர்களை சுதந்திரமாக விளையாட வைக்கும், மேலும் அவர்கள் சென்னை அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தின் வீரத்தை மீண்டும் செய்ய முயற்சிக்கலாம். இந்நிலையில் சென்னைக்கும் டெல்லிக்கு ஐபிஎல் 2023ன் கடைசி ஆட்டத்திற்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்திற்குச் செல்லும் வழியில், CSK அணி பேருந்தை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால், அவர்கள் மைதானத்திற்குள் நுழைவதை கடினமாக்கியது.
India's biggest crowd puller MS Dhoni 🔥🔥🔥#DCvCSK pic.twitter.com/RTW91mI0tA
— Dhoni Army KA™ (@DhoniArmyKA) May 20, 2023
சென்னை மற்றும் டெல்லி ரசிகர்கள் மிகவும் அதிகமாக அங்கே வெய்யில் என்றும் பாராமல் திரண்டதால் பேருந்து மைதானத்திற்குள் செல்ல முடியாமல் திணறியது அந்த வீடியோவை தான் எம்எஸ் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
India's biggest crowd puller MS Dhoni 🔥🔥🔥#DCvCSK pic.twitter.com/RTW91mI0tA
— Dhoni Army KA™ (@DhoniArmyKA) May 20, 2023
போட்டியை பொறுத்தவரையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கையே தேர்வு செய்தார்.
அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே மற்றும் ருதுராஜ் அணிக்கு அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர்.
இவ்விரு வரும் இணைந்து டெல்லி அணியின் பௌலிங்கை சிதறடித்து வந்தனர். 7 ஓவர்கள் முடிவில் 60 ரன்களை குவித்தனர். 37 பந்துகளிலே ருதுராஜ் அவருடைய அரை சத்தத்தை பூர்த்தி செய்தார். குல்தீப் யாதவ் வீசிய ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடினார் ருதுராஜ். இந்நிலையில் இந்த செய்தியை எழுதும் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15.3 ஓவர்களில் 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்துள்ளது.





