ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே பலத்த மழையானது அகமதாபாத்தில் பெய்ய தொடங்கியது. இதனால் போட்டியானது தமதமாக தொடங்கும் என்ற அறிவிப்பே வழங்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து மழையானது பெய்ய தொடங்கியது. அதுவும் இடியுடன் கூடிய மழையாக இருந்தது. இருந்த போதிலும் 8.30 மணியவில் மழை நின்றது ஆனாலும் அதற்கு பிறகு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் ஐபிஎல் பைனல் போட்டியை பார்க்கலாம் என்று வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மழை பெய்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து மைதானத்தில் இருந்து வெளியேற தொடங்கினார்கள்.
அதற்கு பிறகும் மழை அதிகமாக பெய்ததின் காரணமாகவும், மைதானம் அதிக ஈரமாக இருப்பதினால் சென்னை vs குஜராத் போட்டியானது இன்று நிறுத்தப்பட்டது. மேலும் நிறுத்தப்பட்ட இந்த போட்டியானது இன்று (29/05/2023) இரவு 7.30 மணியளவில் மீண்டும் நடைபெறும் என்று தகவலை IPL ட்விட்டர் பக்கமே அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.

இன்று நாளை பெய்தால் என்ன நடக்கும் :
ஆனால் இன்றும் மழை பெய்தால் போட்டி நேற்று போலவே ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் நேற்று நடந்ததை போட்டி நடக்கவில்லை என்றால் இந்த ஐபிஎல் சீசனில் லீக் ஆட்டத்தில் எந்த அணி முதல் இடத்தில் இருந்ததோ அந்த அன்னிக்கே கோப்பையானது வழங்கப்படும். இது கண்டிப்பாக சென்னை அணிக்கு சரியானதே இல்லை ஏனென்றால் குஜராத் அணிதான் இந்த ஐபிஎல் சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சென்றது.
இதனால் குஜராத் அணி மீண்டும் ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வெல்லும். அப்படி வென்றால் ஐபிஎல் அணிகளில் பலம் வாய்ந்த இரண்டாவது அணியாக குஜராத் அணி இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடதக்கது. இப்படிப்பட்ட நிலையில் தான் ஐபிஎல் போட்டியின் மிகவும் பிரபலமான வர்ணனையாளர்களில் ஒருவரான இதனிடையே ஹர்ஷா போக்லே போட்டிருந்த ஒரு ட்விட் பதிவில் “இன்று ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி நடைபெறும் என நம்புகிறேன்.
Hopefully, full game tomorrow. In the unlikely situation that we can't get even a 5 overs a side game, there will be a super over. If even that is not possible, the team that finished higher at the end of the league stage is declared the winner
— Harsha Bhogle (@bhogleharsha) May 28, 2023
ஒருவேளை நேற்று போல மழை பெய்தால் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்படும். ஒருவேளை விளையாட முடியாமல் போனால் சூப்பர் ஓவர் முறை இருக்கும். அதுவும் முடியாவிட்டால் இந்த ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று பதிவிட்டு ஹர்ஷா போக்லே உள்ளார்.




