
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 14வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலபரீட்சை செய்தது.மும்பை அணி இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இந்த முக்கியமான போட்டியில் களமிறங்கியது. இது மும்பை அணியின் 250 ஆவது போட்டியாகும்.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. மும்பை 20 ஒவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே அளிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த பந்துவீச்சாளரான போல்ட் தான்.அவர் 4 ஒவர்களை வீசி 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். ரோகித் ஷர்மா நமன்திர் மற்றும் ப்ராவிஸ் ஆகியோர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார்.

அந்த மூன்று வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறின. எனது அதன் பின்பு மிடில் ஆர்டரில் திணறிவது இருப்பினும் அவர்களால் 20 ஒவர்கள் முடிவு 125 கரங்களை மட்டுமே அடிக்க முடிந்ததுஅதன் பின் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களிலே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்களையும் அஷ்வின் 16 ரன்களையும் பட்லர் 13 ரன்களையும் அவர் அடித்து இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தனது ஹோம் கிரவுண்டில் 250 வது போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் ரியான் பராக் முதல் இடத்தில் இருந்து வருகிறார். இந்த ஐபிஎல்லில் இதுவரை தோல்வியை சந்திக்காத கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் கூறுகையில், டாஸ் அது கேம்சேஞ்சர் என்று நான் நினைக்கிறேன். டாஸ் மிகவும் முக்கியமானது. ட்ரென்ட் போல்ட் மற்றும் நாந்த்ரே பர்கரின் வேகத்தின் அனுபவம் எங்களுக்கு இருந்தது.

[Boult] நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார், அவர் வழங்குவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,. ஆனால் அது நன்றாக இருந்தது. நாம் அனைவரும் எங்கள் பாத்திரங்களைச் செய்துவிட்டு முன்னேறுகிறோம். ஆர் அஷ்வின் போன்ற ஒருவர் எங்களிடம் ஒரு நல்ல பவர்பிளே உள்ளது என்று தெரியும், அதனால் அவர் விக்கெட்டுகளுக்கு செல்லவில்லை, அதை இறுக்கமாக வைத்திருந்தார். எனவே இது குழுப்பணி பற்றியது. என்றும் அவர் கூறினார்.





