ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இதில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 வது ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்களை குவித்தது. இந்நிலையில் 178 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.
Thundering Thakur ⚡️sends SKY back to the pavilion 🔻☝️#MIvLSG #IPLonJioCinema #IPL2023 #TATAIPL | @LucknowIPL pic.twitter.com/DdKXfo3zaL
— JioCinema (@JioCinema) May 16, 2023
ஆனால் ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து நிற்கும் மும்பை அணிக்கு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது அப்போதுதான் சூரிய குமார் யாதவ் களமிறங்கினார். சூரியகுமார் யாதவ் ஐபிஎல் 2023 இன் தொடக்கத்தில் சூர்யா மிகவும் மோசமாக செயல்பட்டாலும், பின்னர் வந்த ஆட்டங்களில் தன்னை திருத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறாரர். எனவே இந்த ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராகவும் அவரிடமிருந்து ஒரு நல்ல இன்னிங் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், லக்னோவைச் சேர்ந்த யாஷ் தாக்கூர் மும்பையின் நம்பிக்கையைத் தகர்த்தார். சூர்யா தனக்குப் பிடித்த சூப்லா ஷாட்டை விளையாடும் போது ஒரு அற்புதமான பந்தை வீசி சூர்யா குமாரின் விக்கெட்டை வீழ்த்தினார். ஒருவேளை சூரிய குமார் யாதவ் இன்னமும் சில ஓவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக லக்னோ அணி வெற்றிபெற்றிருக்கும் என ரசிகர்கள் சோசியல் மீடியாகளில் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் அவரை விரைவில் வீழ்த்தியதால் லக்னோவிற்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகியது. இதனால் யாஷ் தாக்கூரை ராசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையில் தான் சூர்யகுமார் யாதவ் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யாஷ் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வளர்ந்து வரும் வீரர். ஐபிஎல் 2023 ஏலத்தின் போது லக்னோ 45 லட்சம் ரூபாய் விலை கொடுத்து அவரை தனது அணியில் சேர்த்தது. அவர் ஐபிஎல் 2023 இல் லக்னோவுக்காக இதுவரை 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், அதில் அவர் 9 என்ற பொருளாதார விகிதத்தில் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரரின் விக்கெட்டை வீழ்த்தி தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.





