இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது திறமையை அனைவருக்கும் நிரூபித்துள்ளார். இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள 21 வயதான ஜெய்ஸ்வால் 575 ரன்களை குவித்து தற்போது ஆரஞ்சு தொப்பிக்காக போட்டியிடும் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும் சுப்மன் கில்லும் தன்னுடைய முதல் சதத்தை அடித்துள்ளார். அதன் மூலம் ஐபிஎல் 2023ல் இதுவரை 13 போட்டிகளில் 576 ரன்கள் எடுத்துள்ளார். மேலேயும் ஐபிஎல் ஆரஞ்சு கேப் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் தான் ஜெய்ஸ்வாலைப் பற்றியும் சுப்மன் கில் பற்றியும் பேசியுள்ளார் பிரபல இங்கிலாந்து அணியின் வீரரும் ஐபிஎல் வர்ணனையாளருமான பீட்டர்சன்,
கெவின் பீட்டர்சன் கூறியது :
இந்திய டாப் ஆர்டரின் எதிர்காலமான ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலில் பார்க்கிறோம். 50 ஓவர் உலகக் கோப்பைக்காக ஜெய்ஸ்வாலை கண்டிப்பாக நான் பரிந்துரைப்பேன் நான் அவரின் மீது நம்பிக்கை வைத்து அவரை விளையாட அனுப்புவேன். 50 ஓவர் போட்டிகளில் பழைய வீரர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறன். ஆனால் நான் அவரை உடனடியாக அணியில் சேர்த்து விடுவேன்” என்று பீட்டர்சன்.

ஐபிஎல் இளம் வீரர்களுக்கு மூன்று விஷயங்களை வழங்குகிறது. அதவாது அவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, இது உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் பார்வையை அவர்கள் மீது திருப்புகிறது. மேலும் முக்கியமான போட்டியின் போது அழுத்தங்களை சமாளிக்கும் சக்தியை அவர்களுக்கு வழங்குகிறது. ஸ்டேடியங்கள் நிரம்பியுள்ளன, அனைவருமே பிஸியாக இருக்கிறார்கள்.
நீங்க இந்த மூன்று விஷியங்களை சரியாக செய்தால் உங்களால் உலக கிரிக்கெட்டில் விளையாட முடியும். அதனைத்தான் இந்த இரண்டு இளைஞர்களிம் நான் பார்த்தது இதுதான். அவர்கள் கிரிக்கெட் நட்சத்திரங்கள். அவர்கள் வெறும் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் கிடையாது அவர்கள் முழுமையான தரம் வாய்ந்தவர்கள் என்று எழுதியிருந்தார் பீட்டர்சன்.





