
ஐபிஎல் 2023 லீக் போட்டிகளில் 56 போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 5 இடத்திலும் கொல்கத்தா அணி 6 இடத்திலும் இருந்து வருகிறது. இவ்விறு அணிகளும் புள்ளி பட்டியலில் ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் இருந்து வருகிறது.டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார்.
ICYMI!
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
That landmark moment when @yuzi_chahal became the leading IPL wicket-taker of all-time.#TATAIPL pic.twitter.com/IhkMNdB6ud
அதன் படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு ரன்களை சேர்க்க திணறியே வந்தனர். ராய் 10 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேற, கூர்பாஸ் 18 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த அணியின் கேப்டன் ராணா அணிக்கு நம்பிக்கை சேர்ப்பார் என எதிர் பார்த்த நிலையில் அவரும் 22 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் வந்த ரசல் கடந்த போட்டியை போல் அதிரடியை காட்டி ரன்களை குவிப்பார் என எதிர் பார்த்த நிலையில் 10 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு வந்த வெங்கடேஷ் ஐயர் அணிக்கு நம்பிக்கையை சேர்த்தார். நிதானமாகவே விளையாடி 42 பந்துகளில் 52 ரன்களை எடுத்து இருந்த போது சஹல் சுழலில் சிக்கி வெளியேறினார். ஷர்துல் தாக்கூர் 1 ரன்களில் வெளியேற, அதிரடி மன்னன் ரின்கு சிங்கும் 16 ரன்களில் வெளியேற கொல்கத்தா அணி பெரும் தடுமாற்றத்தையே சந்தித்து வந்தனர்.நரேன் 6 ரன்களில் வெளியேற 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து நிலையில் 149 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
Milestone 🚨 – Yuzvendra Chahal becomes the leading wicket-taker in IPL 👏👏#TATAIPL | @yuzi_chahal pic.twitter.com/d70pnuq6Wi
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
யுவேந்திர சாஹல் :
இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் யுவேந்திர சாஹல் அற்புதமாக ஆடினார், குறிப்பாக கொல்கத்தா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான வெங்கடேஷ் ஐயர், கேப்டன் நிதிஸ் ராணா, ரிங்கு சிங், ஷர்துல் தாகூர் போன்ற அதிரடி பேட்ஸ்மேக்ளின் விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியை மேலும் ரன்கள் எடுக்க விடாமல் தடுத்தார்.
Yuzi vs KKR (at the death) 👀 pic.twitter.com/vaH7MnS7YA
— Rajasthan Royals (@rajasthanroyals) May 11, 2023
அதோடு இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாஹல் 6.20 என்ற எக்கனாமிக் ரேட்டுடன் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை குறைந்த ஐபிஎல் போட்டிகளில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படித்துள்ளார் யுவேந்திர சாஹல். இதற்கு முன்னர் சென்னை அணியின் பிராவோ எடுத்த 183 விக்கெட்டுகள் சாதனையாக இருந்த நிலையில் யுவேந்திர சாஹல் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படித்துள்ளார்.





